திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

திருத்தூதுப்பயணத்தின் மூன்றாம் நாள் நிறைவு

தனது திருத்தூதுப்பயணங்களின்போது அவ்விடங்களில் உள்ள இயேசு சபை இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள அருள்தந்தையர்களுடன் உரையாடுவதைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெல்ஜியம் இயேசு சபையினரால் நடத்தப்படும் தூய மைக்கேல் கத்தோலிக்கப் பள்ளி இல்லத்தில் இருக்கும் அருள்பணியாளர்களைச் சந்தித்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

பல்கலைக்கழகத்திலிருந்து 27.5 கிமீ தூரம் காரில் பயணித்து தூய மைக்கேல் கல்லூரிக்கு வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

தூய மைக்கேல் கத்தோலிக்கப் பள்ளி

இயேசு சபையாரால் நடத்தப்படும் தூய மைக்கேல் கல்லூரியானது எட்டர்பர்க்கில் அமைந்துள்ளது. முதல் கத்தோலிக்கப் பள்ளியானது 1604 ஆம் ஆண்டு rue de Ruysbroeck என்னுமிடத்தில் கட்டப்பட்டது. 1773ஆம் ஆண்டு இயேசு சபை ஒடுக்கப்பட்டு, 1892ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. 1835 ஆம் ஆண்டில், அருள்தந்தை ஜே.பி பூன் rue des Ursulines இல் இரண்டாவது கத்தோலிக்கப் பள்ளியை நிறுவினார். இடப்பற்றாக்குறையின் காரணமாக, இயேசு சபையினர் வேறு இடத்தில் ஒரு புதிய கல்வி நிறுவனத்தை உருவாக்க ஒரு இடத்தைத் தேடினார்கள். ஆறு ஹெக்டேர் பரப்பளவில் வோலுவே-செயிண்ட்-பியர் பகுதியில் எட்டர்பீக் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள அவென்யூ டி டெர்வ்யூரன். 1902 ஆகஸ்ட் 16, அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, இல், ஜேசுட் தந்தையர் சமூகம் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது.

தனது திருத்தூதுப்பயணங்களின்போது அவ்விடங்களில் உள்ள இயேசு சபை இல்லங்களுக்குச் சென்று அங்குள்ள அருள்தந்தையர்களுடன் உரையாடுவதைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெல்ஜியம் இயேசு சபையினரால் நடத்தப்படும் தூய மைக்கேல் கத்தோலிக்கப் பள்ளி இல்லத்தில் இருக்கும் அருள்பணியாளர்களைச் சந்தித்தார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு உள்ளூர் நேரம் இரவு 8.40  மணியளவில் இந்திய இலங்கை நேரம்  நள்ளிரவு 12.10 மணியளவில் ஏறக்குறைய 6000 மாணவர்கள் கூடியிருந்த Hope Happening என்னும் நிகழ்விற்குச் சென்று மாணவர்களை வாழ்த்தினார்.  செப்டம்பர்  29 ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சிறப்பு திருப்பலியில் பங்கேற்பதற்காக பெல்ஜியம் மட்டுமல்லாது அண்டை நாடுகளில் இருந்து வந்திருந்த ஆண்கள் பெண்கள், இளையோர் சிறார், குடும்பங்கள் என பலர் குழுமியிருக்க அவர்கள் மத்தியில் எதிர்பாராதவிதமாக வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கரவொலியாலும் மக்கள் அனைவரின் மகிழ்வொலியாலும் அவ்விடமே அதிர்ந்தது. இளையோரைப் பார்த்து கையசைத்து வாழ்த்திய திருத்தந்தை அவர்களுடன் இணைந்து புகைப்பட எடுத்துக்கொண்டார்.

இளைஞர்கள் சத்தம் எழுப்பவர்களாக இருங்கள். சோர்ந்து போய் கவலையுடன் இருக்கும் இளைஞர்கள் தங்களது இளமைத்துவத்தில் குறைபாடு உடையவர்களாக இருக்கின்றார்கள் என்றே அர்த்தம் என்று கூறினார் திருத்தந்தை. இறைவனை மனதில் வைத்திருங்கள் செபியுங்கள், மற்றவர்களை ஒருபோதும் இழிவாகக் கருதாதீர்கள். பார்க்காதீர்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள் சிறு குழந்தைகள் போல வாழுங்கள். விண்ணரசில் அவர்களேப் பெரியவர்கள்,. செபிப்பதை மறாந்து விடாதீர்கள் என்று கூறினார்.

இளைஞர்களுடான சந்திப்பு முடிந்தது திருப்பீடத்தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், இரவு உணவினை உண்டு நித்திரைக்குச் சென்றார்.

பெல்ஜியம் நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் சந்திப்பு, அரசர் பால்டோவின் கல்லறை சந்திப்பு, புலம்பெயர்ந்தோர் குடும்பங்கள் சந்திப்பு, லூவைன் கத்தோலிக்க பல்கலக்கழக மாணவர்கள் சந்திப்பு, இயேசு சபை அருள்பணியாளர்கள் சந்திப்பு, பெல்ஜியம் இளைஞர்களின் இரவு நேர கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது திருத்தூதுப்பயணத்தின் மூன்றாம் நாளை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2024, 15:19