இயற்கை எழில் நிறைந்த ஏரி இயற்கை எழில் நிறைந்த ஏரி  

இணக்கமான வாழ்வின் வழியாக படைப்பின் சிறப்பை உணரலாம்

தலைமுறைகள், மக்கள் மற்றும் அனைத்து வேறுபாடுகளும், ஒன்றுடன் ஒன்று இணக்கமாக இருந்தால், மனிதனின் மற்றும் படைப்பின் அற்புதமான சிறப்பை நம்மால் வெளிப்படுத்த முடியும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் வாழ்கின்ற இந்த உலகமானது பலவிதமான உண்மைகளால் ஆனது என்றும், ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து இணக்கமாக வாழ்கின்றபோது படைப்பின் அற்புதமான சிறப்பை நம்மால் வெளிப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 23 திங்கள்கிழமை படைப்பின் காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை குறுஞ்செய்தியாக இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமுறையினர், மக்கள், அனைத்து விதாமன வேறுபாடுகள் ஆகிய அனைத்தும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவருக்கொருவர் உதவிகள் செய்வதற்கும் ஒருவர் மற்றவர் தேவைகளை பூர்த்தி செய்வதற்குமான துல்லியமாக வேறுபட்ட பல உண்மைகளால் இவ்வுலகம் ஆனது என்றும், தலைமுறைகள், மக்கள் மற்றும் அனைத்து வேறுபாடுகளும், ஒன்றுடன் ஒன்று இணக்கமாக இருந்தால், மனிதனின் மற்றும் படைப்பின் அற்புதமான சிறப்பை நம்மால் வெளிப்படுத்த முடியும் என்றும் தனது டுவிட்டர் குருஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2024, 12:20