மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை (கோப்புப்படம்) மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை (கோப்புப்படம்) 

திருத்தூதுப்பயண நிறைவில் அன்னை மரியாவிற்கு நன்றி

எந்த ஒரு பயணத்தினைத் தொடங்குவதற்கு முன்பாக அதனை அன்னை மரியாவிற்கு அர்ப்பணிப்பதையும், அது நிறைவுற்றதும் அன்னை மரியாவிற்கு நன்றி கூறுவதையும் தனது வழக்கமாகக் கொண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தனது 46ஆவது திருத்தூதுப்பயணம் நல்ல முறையில் நிறைவு பெற்றதற்கு நன்றி செலுத்த உரோமில் உள்ள அன்னை மரியா பெருங்கோவில் சென்று அங்குள்ள Salus Populi Romani என்னும் உரோம் நகரின் பாதுகாவலியான அன்னை மரியாவிற்கு நன்றி செலுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3.00 மணி, இந்திய இலங்கை நேரம் மாலை 6.30 மணியளவில் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள் அங்கிருந்து மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னை மரியாவின் திருஉருவப்படத்தின் முன்  சென்று அமைதியாக செபித்து நன்றி கூறினார்.

எந்த ஒரு பயணத்தினைத் தொடங்குவதற்கு முன்பாக அதனை அன்னை மரியாவிற்கு அர்ப்பணிப்பதையும், அது நிறைவுற்றதும் அன்னை மரியாவிற்கு நன்றி கூறுவதையும் தனது வழக்கமாகக் கொண்டவர் திருத்தந்தை பிரான்சிஸ்.

எனவே தனது இந்த 46ஆவது திருத்தூதுப் பயணத்தின் நிறைவிற்காக அன்னை மரியாவிற்கு நன்றி தெரிவித்து அதன்பின் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2024, 14:45