பாப்புவா நியூ கினி தலைநகரில் வந்திறங்கிய திருத்தந்தை பாப்புவா நியூ கினி தலைநகரில் வந்திறங்கிய திருத்தந்தை 

பாப்புவா நியூ கினி நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமையன்று, உள்ளூர் நேரம் மாலை 6.50 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2 மணி 20 நிமிடங்களுக்கு பாப்புவா நியூ கினி தலைநகர் வந்தடைந்தார் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 45வது திருப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தோனேசியாவில் திருப்பயணத்தை நிறைவுச் செய்து தற்போது பாப்புவா நியூ கினி நாட்டில் வந்திறங்கியுள்ளார். அந்நாட்டிற்கான பயணத்திட்டங்கள் இன்னும் துவக்கப்படவில்லை. ஏனெனில் செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமையன்று, உள்ளூர் நேரம் மாலை 6.50 மணிக்கு, அதாவது இந்திய நேரம்  பிற்பகல் 2 மணி 20 நிமிடங்களுக்கு பாப்புவா நியூ கினி தலைநகர் Port Moresbyயை வந்தடைந்த திருத்தந்தை, விமான நிலையத்தில் துணைப்பிரதமரால் வரவேற்கப்பட்ட பின்னர், அங்கிருந்து 7.9 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகத்தை உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் சென்றடைந்து அங்கேயே இரவு உணவருந்தி ஓய்வெடுத்தார்.

இப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருப்பயணம்தான் அவர் இதுவரை மேற்கோண்ட 44 திருப்பயணங்களைவிட அதிக நேரத்தையும் தூரத்தையும் உள்ளடக்கியது. தற்போது திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணமோ 11 நாட்கள் 1 மணி 10 நிமிடங்களைக் கொண்ட நீண்ட பயணமாக உள்ளது. இதுபோல் இந்த 45ஆவது திருப்பயணம்தான் 32 ஆயிரத்து 814 கிலோமீட்டர் என்ற வகையில் இதுவரை உள்ள திருப்பயணங்களில் அதிக தூரத்தைக் கொண்டுள்ளதாக உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2024, 16:03