திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

உடன்பிறந்த உறவுக்கான பாதைகளைத் திறப்போம்!

கடந்தகால பாடங்கள் அர்த்தமுள்ள பதில்களை வழங்குவதற்கும் அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியின் பாதைகளில் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வழிமுறைகளைத் தேடுவதற்கும் இந்நிகழ்வு நம்மை அழைக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நீதியைப் பயன்படுத்தவும், புரிதல் மற்றும் உடன்பிறந்த உறவுக்கான பாதைகளைத் திறக்கவும், புதிய மற்றும் ஒருங்கிணைக்கும் இடங்களை உருவாக்கவும், ஓர் அழகான உலகத்தை படைக்கவும், உங்களை கடவுளிடம் ஒப்படைக்கவும் அரசி எலிசபெத்தின் வழியில் துணிவுடனும் உறுதியுடனும் இருங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான டெனெரிஃப் தீவில் இடம்பெறும், ‘நிலைமாறுகால நீதியின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்’ என்ற புத்தகம் வழங்கும் விழா ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, கற்கவேண்டிய 3 பாடங்கள் குறித்து தனது உரையில் விளக்கியுள்ளார்.

முதலில், கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது, அடிக்கடி ஏற்படும் வேதனையான அனுபவங்களை மதிப்பாய்வு செய்வது, தற்போதைய சவால்களுக்கு ஒத்திசைவான மற்றும் அர்த்தமுள்ள பதில்களை வழங்குவதற்கும், அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியின் பாதைகளில் முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் வழிமுறைகளைத் தேடுவதற்கும் இந்நிகழ்வு நம்மை அழைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இது சம்பந்தமாக, தற்போதைய நிகழ்வுகளைக் குறிப்பிடாமல், கொலம்பஸின் முதல் அமெரிக்கா பயணத்தின் போது நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன் என்று கூறிய திருத்தந்தை, இந்தியர்களை (Indies) அடிமைகளாக விற்பது குறித்து காஸ்டிலின் இசபெல்லாவுக்கு வந்த செய்தியை நான் இங்கே குறிப்பிடுகிறேன் என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

இரண்டாவது பாடம் உடனடி பதில் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, எலிசபெத் அரசியின் ஒரு தரப்பினரின் அரசியல் அதிகாரமாக மட்டுமல்லாமல், தனது செயல்களைப் பற்றி கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்த ஒருவரின் தார்மீக மனசாட்சியாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சட்டத்தின் வலிமை, துணிவான, புதுமையான மற்றும் உறுதியானவற்றை விதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

மூன்றாவது பாடம் ஒருவேளை மிகவும் கடினமானதாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது என்றும், அத்தகைய விதிகளை திறம்பட மற்றும் உறுதியாக செயல்படுத்தல் என்பது எப்போதும் எளிதாக இருக்காது என்றும் விளக்கினார்  திருத்தந்தை.

இவைகள் இந்தியத் தீவுகளின் (Indies) சட்டங்களின் மனவலிமை பேணப்பட்டு, மனித மாண்பைப் பாதுகாப்பதில் ஒளிரச்செய்து, ஊக்கமளிக்கிறது என்பதும், சிரமங்கள் இருந்தபோதிலும். அது உள்ளடக்கிய நபரின் ஒருங்கிணைந்த கருத்தாக்கம், நீதி மற்றும் சட்டத்திற்கான அர்ப்பணிப்பில் நமக்கு ஊக்கமளிக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2024, 16:25