தூய கில்லஸ் ஆலயத்தைச் சார்ந்த வீடற்ற ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் தூய கில்லஸ் ஆலயத்தைச் சார்ந்த வீடற்ற ஏழைகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

பெல்ஜியத்தில் இரண்டாம் நாள் திருப்பயண நிகழ்வுகள்

திருப்பீடத்தூதரகத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 9.40 மணியளவில் புறப்பட்ட திருத்தந்தை அவர்கள், புரூக்செல்சில் உள்ள தூய கில்லஸ் ஆலயத்தை வந்தடைந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 28 சனிக்கிழமை காலை தனது 46ஆவது திருத்தூதுப்பயணத்தின் மூன்றாம் நாளை துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தூதரகத்தில் காலை தனியாக திருப்பலி நிறைவேற்றினார். காலை உணவிற்குபின் உள்ளூர் நேரம் 8.30 மணிக்கு, இந்திய இலங்கை நேரம்  நண்பகல் 12 மணியளவில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் துணைத்தலைவர் Margarítis Schinás, ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகைக்கான ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் Dubravka Šuica, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி Oxana Domenti, ஐரோப்பாவிற்கான உணவுப்பாதுகப்பு (WHO) மண்டல இயக்குனர் Hans Kluge ஆகியோரை சந்தித்தார்.

அவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து திருப்பீடத் தூதரகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு அங்குக் கூடியிருந்த மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத்தூதரகத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 9.40 மணியளவில் புறப்பட்ட திருத்தந்தை அவர்கள், புரூக்செல்சில் உள்ள தூய கில்லஸ்  ஆலயத்தை வந்தடைந்தார். அங்கு வீடற்ற ஏழை எளியோரைச் சந்தித்து  அவர்களோடு சிரிது நேரம் உரையாடினார். அதன்பின் அங்கிருந்து ஏறக்குறைய 9.8 கிமீ தூரம் காரில் பயணித்து கோகேல்பெர்க்கில் உள்ள  திருஇருதய பேராலயம் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2024, 15:11