திருத்தந்தையின் 45ஆவது திருத்தூதுப்பயணம் நிறைவுபெற்றது
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 2 திங்கள் கிழமை தான் மேற்கொண்ட 45ஆவது திருத்தூதுப் பயணத்தை செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை நிறைவு செய்து உரோம் உள்ளூர் நேரம் மாலை 6.45 மணியளவில் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தோனேசியா, பாப்புவா நியு கினி, கிழக்கு திமோர், சிங்கப்பூர் என நான்கு நாடுகளை உள்ளடக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான 45 ஆவது திருத்தூதுப்பயணம் செப்டடம்பர் 13 வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது.
சிங்கப்பூரிலிருந்து செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை காலை கிளம்பிய விமானம் உரோம் உள்ளூர் நேரம் மாலை 6. 46 மணிக்கு பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்த உடன் தனது திருப்பயணம் நன்முறையில் நிறைவுபெற்றதற்கு நன்றியாக உரோம் மேரி மேஜர் பேராலயம் சென்று அன்னை மரியாவிற்கு நன்றி செலுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிங்கப்பூர் அரசுசுத்தலைவருக்கு நன்றி தந்தி
தனது திருத்தூதுப்பயணத்தினை முடித்து உரோம் நகர் நோக்கித் திரும்பும் நிலையில் தனக்கு வரவேற்பளித்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி என்றும், அரசுத்தலைவர் அதிகாரிகள் மற்றும் மக்களில் விருந்தோம்பலுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்வாழ்விற்காக தொடர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்து, சிங்கப்பூர் மக்கள் அனைவர் மீதும் இறைவனின் ஆசீரை அளிப்பதாக அத்தந்திச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்