இயற்கையின் எழில் இயற்கையின் எழில்  (AFP or licensors)

விண்ணகக்கொடை நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழல்

வாழ்க்கை வரலாறு மற்றும் அதில் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு மத்தியில், நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் அழகை இரசிக்க இக்கொடையானது நமக்கு நினைவூட்டுகின்றது, நாம் வாழும் விண்ணகத்திலிருந்து நமக்குக் கிடைத்த சுற்றுச்சூழல் என்னும் கொடை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலானது விண்ணகத்திலிருந்து கொடுக்கப்பட்ட கொடை என்றும், வாழ்க்கை வரலாறு, அதில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் இப்பூமியின் அழகை நினைவுகூர இக்கொடையானது அழைப்புவிடுக்கின்றது என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 3 வியாழனன்று ஹாஸ்டாக் படைப்பின் காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், நாம் வாழ்கின்ற இந்த உலகை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாம் வாழும் இந்த சுற்றுச்சூழல் விண்ணகத்திலிருந்து நமக்குக் கிடைத்த கொடை. வாழ்க்கை வரலாறு மற்றும் அதில் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு மத்தியில், நாம் வாழ்கின்ற இந்தப் பூமியின் அழகை இரசிக்க நமக்கு நினைவூட்டுகின்றது. நமது எதிர்காலத்தை பணத்தின் மீதான பேராசை மற்றும் ஊகங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2024, 14:17