பிரேசில் நாட்டின் பாதுகாவலரான தூய அபரேசிதா அன்னை மரியா பிரேசில் நாட்டின் பாதுகாவலரான தூய அபரேசிதா அன்னை மரியா  

மகிழ்ச்சியின் மரியா நம் வாழ்வை நிறை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்

2013ஆம் ஆண்டு ஜூலை 24, அன்று பிரேசிலில் உள்ள அபரேசிதா அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை அவர்கள், அபரேசிதா அன்னை மரியா மீது அளவற்ற பக்தி கொண்டவர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நல்லிணக்கம் கொண்ட அபரேசிதா அன்னை மரியாவின் திருவிழா நாளில் அனைத்து கிறிஸ்தவர்களுடனும் நல்லிணக்கம், அனைத்து மனித குலத்தாருடனும் நல்லிணக்கம், சுற்றுச்சூழலுடன் நல்லிணக்கம் கொண்டு வாழ முன்னோக்கிச் செல்லுங்கள் என்றும், மகிழ்ச்சியின் அன்னையான மரியா நம் வாழ்வை நிறை மகிழ்ச்சியால் நிரப்பட்டும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 12 சனிக்கிழமையன்று பிரேசில் நாட்டின் பாதுகாவலரான தூய அபரேசிதா அன்னை மரியா திருவிழாவை முன்னிட்டு பிரேசில் மக்களுக்கு அனுப்பிய வாழ்த்துக் காணொளிச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருவிழா நாளில் பிரேசில் மக்களுடன் ஆன்மிக அளவில் உடனிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டின் பாதுகாவலரான தூய அபரேசிதா அன்னை மரியாவின் திருவிழாவை முன்னிட்டு பிரேசில் மக்களுக்கு சிறு காணொளிச் செய்தி ஒன்றின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் இவ்வாழ்த்து செய்தியானது உலக ஆயர் மாமன்ற பொது அமர்வின் போது பிரேசிலின் Porto Alegre  உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினாலாக உயர்த்தப்பட உள்ள பேரருள்திரு Jaime Spengler அவர்களால் பதிவு செய்யப்பட்டது.

அபரேசிதா அன்னை மரியின் ஆசீர் மற்றும் துணையுடன் ஒருவர் மற்றவர் மீதும், நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்டு வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், இத்தகைய வழியில் முன்னேறிச் செல்ல அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு ஜூலை 24, அன்று பிரேசிலில் உள்ள அபரேசிதா அன்னை மரியா திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை அவர்கள், அன்னை மரியா மீது அளவற்ற பக்தி கொண்டவர்.

2016 செப்டம்பர் 3, அன்று, வத்திக்கான் தோட்டத்தில் அபரேசிதா மரியாவின் படத்தை திறந்து வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், "ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், கைவிடப்பட்ட முதியவர்கள், தெருவோரக் குழந்தைகளுக்காக செபிக்க உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2024, 15:24