ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

இயக்கத்தில் இருக்கும் நீர் போல இளைஞர்கள் வாழவேண்டும்

சோர்வடைந்து முன்னோக்கிச் செல்லாமல் தேங்கி விடும் இளைஞன் தீயவனாகின்றான் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இளைஞர்கள் அனைவரும் ஓடுகின்ற தண்ணீர் போல முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் துணிவு மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 23 புதன்கிழமை காணொளிச்செய்தி ஒன்றின் வழியாக இளைஞர் மாமன்றத்திற்கு செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முன்னோக்கிச் செல்வது என்பது மிக முக்கியமானது என்று அச்செய்தியில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள் முன்னோக்கிச்செல்லும் இளைஞன் நன்றாக வாழ்கின்றான் என்றும், முன்னோக்கிச் செல்லாமல் நின்றுவிடும் இளைஞன் தேங்கி நிற்கும் தண்ணீர் போன்றவன் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ஓடுகின்ற நீர் விளைச்சலையும் வளமையையும் தருகின்றது, அதுவே தேங்கியிருக்கும் நீரானது கழிவுகளையும் இறந்த விலங்கினங்களையும் கொண்டு வருகின்றது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், சோர்வடைந்து முன்னோக்கிச் செல்லாமல் தேங்கி விடும் இளைஞன் தீயவனாகின்றான் என்றும் கூறியுள்ளார்.

எப்போதும் முன்னோக்கிச் செல்லுங்கள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துணிவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இளைஞர்களுக்கு ஊக்கமூட்டியதுடன் தனக்காக செபிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2024, 10:07