இயேசுவே நமது மிகப்பெரிய, உண்மையுள்ள, உற்ற நண்பன்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளுடன் நட்புறவுடன் வாழவும், இயேசுவே நமது மிகப்பெரிய உண்மையுள்ள, நம்பிக்கையுள்ள உற்ற நண்பன் என்பதை உணர்ந்து வாழவும் அருள்வேண்டுவோம் என்று குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 21 திங்கள்கிழமை வெளியிடப்பட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்மை விட்டு ஒருபோதும் விலகிச் செல்லாதவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நமதாண்டவருடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும் வாழவும், நாம் விலகினாலும் நம்மை விட்டு விலகிச்செல்லாத நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசுவே நமது மிகப்பெரிய உண்மையான உற்ற நண்பர் என்பதைக் கண்டறியவும் தேவையான அருளினை வேண்டுவோம் என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்