இலத்தீன் அமெரிக்காவில் சுற்றுச்சூழலும் காலநிலை மாற்றமும் குறித்த உரோம் கருத்தரங்கு இலத்தீன் அமெரிக்காவில் சுற்றுச்சூழலும் காலநிலை மாற்றமும் குறித்த உரோம் கருத்தரங்கு 

காலநிலை மாற்றங்களால் ஏழைகளே பாதிக்கப்படுகின்றனர்

Laudato si’ மற்றும் Laudate Deum ஏடுகளின் ஒளியில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொண்டதில் இலத்தீன் அமெரிக்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பில் உரோம் நகரில் கருத்தரங்கு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இலத்தீன் அமெரிக்காவில் சுற்றுச்சூழலும் காலநிலை மாற்றமும் என்பது குறித்து உரோம் நகரில் வத்திக்கானுக்கான பொலிவியா, கியூபா மற்றும் வெனிசுவேலா நாடுகளின் தூதரகங்கள் ஏறபாடுச் செய்த கருத்தரங்கிற்கு, படைப்புகள் அனைத்தோடும் ஒன்றிணைப்பை ஏற்பாடுச் செய்யவேண்டிய அவசியத்தைப் வலியுறுத்தி செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை நாம் மறைக்கவோ மறுக்கவோ இயலாது என உரைக்கும் திருத்தந்தையின் செய்தி, இந்த விளைவுகள் ஏழை நாடுகளையே அதிகம் அதிகமாகப் பாதிப்பதாகவும் தெரிவிக்கிறது.

Laudato si’ மற்றும் Laudate Deum ஏடுகளின் ஒளியில் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொண்டதில் இலத்தீன் அமெரிக்காவின் அனுபவங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்ற வத்திக்கான் கருத்தரங்கிற்கு திருத்தந்தை அனுப்பிய செய்தி, மக்களுடன் உறவுகளை பலப்படுத்துவதையும், படைப்புகளுடன் நெருங்கிய இணைப்பைக்கொள்ள வேண்டியதையும் வலியுறுத்தியது.

உலகிற்குள் பிரிவினைகள் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில், பொதுவான ஓர் இல்லத்தை கட்டியெழுப்பவேண்டியது நம் கடமை என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, உலகைப் பாதுகாக்க நாம் தவறி விட்டதால் அமைதியையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என மேலும் கூறியுள்ளார்.          

இக்கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Robert Francis Prevost அவர்கள், ஒருவருக்கொருவர் உதவுபவர்களாக வாழ்வோமேயன்றி, இயற்கையை அடக்கியாள முயலும் மனிதர்களாக அல்ல என எடுத்துரைத்தார்.

இதே கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Peter Appiah Turkson அவர்கள், நாம் நிறைய உருவாக்குகிறோம் ஆனால் குறைவாகவே பகிர்கிறோம் என்ற கவலையை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 15:50