La Scuola பதிப்பகம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எதிர்காலம் புதிய தலைமுறையினருக்குச் சொந்தமானது, நீங்கள் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் எவ்வாறு கடத்துவது என்று தெரிந்தால், நீங்கள் தயாரிக்கும் நூல்கள் அறிவு மற்றும் ஞானத்தின் தாகத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றால், அவர்களால் அதை உருவாக்க முடியும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
நவம்பர் 21, வியாழன் இன்று, வடக்கு இத்தாலியின் Brescia விலுள்ள La Scuola என்ற பதிப்பகத்தின் பிரதிநிதிகளுக்குத் திருப்பீடத்தில் வழங்கிய உரையொன்றில் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நெருக்கடியான வேளைகளில் இறைவாக்கினர்களின் குரல்கள் நம்பிக்கையின் எல்லைகளைக் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன என்றும் கூறினார்.
பள்ளிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக, SEI, Capitello ஆகிய இரண்டு பிற கத்தோலிக்கரால் ஈர்க்கப்பட்ட பதிப்பகங்களை துணிவுடன் வாங்கிய அவர்களின் நிறுவனத்தின் நிலையை இன்று கணிக்கும்போது, அவர்களின் சிறந்த சக குடிமகனின் சபதத்தை நிறைவேற்றுவதாகவும் கூறலாம் என்றும் உரைத்தார் திருத்தந்தை.
பெரிய பதிப்பகங்களின் போட்டி மற்றும் மத ஆராய்ச்சியின் இடப்பெயர்வு மற்றும் பரவலான அலட்சியத்தால் குறிக்கப்பட்ட கலாச்சார மாற்றத்தின் காரணமாக, கடினமான காலங்களில் ஆபத்துக்களை அகற்ற அவர்கள் அச்சமின்றி செயல்பட்டதாகவும் அவர்களைப் பாராட்டினார் திருத்தந்தை.
கல்வியில் ஆர்வம், பயிற்சியாளர்களின் பயிற்சி ஆகியவை அவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தூண்கள் என்று கூறிய திருத்தந்தை, அனைத்து நிலை மாணவர்களுக்கான பாட நூல்கள், ஆசிரியர்களை இலக்காகக் கொண்ட பத்திரிகைகள், கற்பித்தல் பணிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், திருஇருதய கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மதிப்புகளில் பயிற்சி அளிக்கும் விழிப்புணர்வைப் பற்றி பேசுகின்றன என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்