திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

பலவீனமானவர்களை சுரண்டுவது பெரும்பாவம்

இயேசுவின் சீடர்களாகிய நாம், கடவுளையும் அவர் அதிகமாக அன்பு செய்கின்ற நபர்களான ஏழைகள் மற்றும் பலவீனமானவர்களை முன்னிலையில் வைக்க வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

சமூகத்தில் மிகவும் பலவீனமானவர்களாக இருப்பவர்களை சுரண்டுவது பெரும்பாவம் என்றும், இப்பாவமானது உடன்பிறந்த உணர்வை சிதைக்கும், சமூகத்தை சீரழிக்கும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 16 சனிக்கிழமை பலவீனமானவர்கள் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பலவீனமானவர்களை சுரண்டுவது பெரும்பாவம், இது சமூகத்தையும் உடன்பிறந்த உறவையும் சீரழிக்கும் என்றும், நற்செய்தியின் புளிக்காரத்தை இவ்வுலகிற்குக் கொண்டு வர விரும்புகின்ற இயேசுவின் சீடர்களாகிய நாம், கடவுளையும் அவர் அதிகமாக அன்பு செய்கின்ற நபர்களான ஏழைகள் மற்றும் பலவீனமானவர்களை முன்னிலையில் வைக்க வேண்டும் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2024, 14:53