தனிமைத்துயர், மறக்கப்பட்ட கண்ணீர் என திருஅவையில் எதுவுமில்லை
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருஅவையில் தனிமைத்துயர், மறக்கப்பட்ட கண்ணீர் என்று எதுவுமில்லை என டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 2 சனிக்கிழமை திருஅவை நினைவுகூரும் அனைத்து ஆன்மாக்கள் திருவிழாவை முன்னிட்டு ஹேஸ்டாக் செபம், புனிதர்களுடைய சமூக உறவு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது துயரமும் கண்ணீரும் பொதுவான அருளில் பங்கேற்கின்றன என்றும் அவை ஒவ்வொன்றும் நம்மை சுவாசிக்கச்செய்கின்றன என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிமைத் துயர் மறக்கப்பட்ட கண்ணீர் என்று எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இழப்பின் துயரில் வேதனையில் இருப்பவர்களுக்கு ஆறுதலையும், இறந்தவர்கள் இறைவனில் வாழ்கிறார்கள், பூமியில் புதைக்கப்பட்ட அவர்களின் உடல்கள் ஒரு நாள் திருமகனின் உயிர்ப்பின் வெற்றியில் பங்குகொள்வார்கள் என்றும் அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாளின்போது உரோம் லௌரென்தினோ கல்லறையில் திருத்தந்தை செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்