புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்   (Vatican Media)

கர்தினால் Kevin Joseph Farrell, ஓய்வூதிய நிதியத்தின் புதிய நிர்வாகி

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பின்னணியில் இவை எளிதான முடிவுகள் அல்ல, குறிப்பிட்ட உணர்திறன், தாராள மனப்பான்மை மற்றும் அனைவரின் தரப்பிலும் தியாகம் செய்ய விருப்பம் தேவைப்படும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பொருளாதாரச் சீர்திருத்தத்தின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக ஏற்கனவே கருதப்பட்டு, அதன் தொடக்கத்திலிருந்தே அடுத்தடுத்த திருத்தந்தையர்களின் கவலைக்குரிய ஒன்றாக இருந்த நமது ஓய்வூதிய நிதியின் நிர்வாகத்தை தான் குறிப்பிட்டு பேச விரும்புவதாகக் கூறினார் திருத்தந்தை.

நவம்பர் 21, வியாழன் இன்று வத்திக்கானில் உள்ள திருப்பீடத் தலைமை அலுவலகங்களின் தலைவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

காலங்காலமாக இந்தக் காரியத்தில் ஆராய்ந்தவர்கள் அனைவரும் திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நியாயமான ஓய்வூதிய மாதிரியை உறுதிசெய்து, இருப்பவர்களுக்கு மாண்புக்குரிய நன்மைகளை வழங்குவதற்கான தார்மீகப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையால் பொறுப்புடன் அவர்களது பணிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த நோக்கத்திற்காக, பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அதில் இருந்து தற்போதைய ஓய்வூதிய மேலாண்மை மற்றும் இருக்கும் சொத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை உருவாக்குகிறது என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

ஓய்வூதிய நிதியத்தின் நிலைத்தன்மையை அடைவதற்கு, முழு நிறுவனத்திற்கும் உள்ள குறைந்த வளங்கள் மற்றும் தற்போதைய மற்றும் பொருத்தமான ஓய்வூதிய செயல் எல்லையில், எதிர்கால ஊழியர்கள், வெவ்வேறு தலைமுறையினரிடையே நீதி மற்றும் சமத்துவத்தின் கண்ணோட்டத்தில், அவசர கட்டமைப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை நாம் அனைவரும் இப்போது முழுமையாக அறிவோம் என்று விளக்கியுள்ளார் திருத்தந்தை.

மேலும் இவை எளிதான முடிவுகள் அல்ல, குறிப்பிட்ட உணர்திறன், தாராள மனப்பான்மை மற்றும் அனைவரின் தரப்பிலும் தியாகம் செய்ய விருப்பம் தேவைப்படும் என்பதையும் தனது கடித்ததில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு, கர்தினால் Kevin Joseph Farrell அவர்களை ஓய்வூதிய நிதியத்தின் ஒரே நிர்வாகியாக நியமிப்பதற்கான எனது முடிவை இன்று உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்தத் தேர்வு, இந்த நேரத்தில் நமது ஓய்வூதிய அமைப்பு எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கான இன்றியமையாத படியாகும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 November 2024, 15:54