திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ். 

நவீன அடிமைத்தனம் தவறானது, மனித நேயமற்ற செயல்

நாம் அனைவரும் உயிருள்ள கடவுளின் சாயல்களாகப் படைக்கப்பட்டுள்ளவர்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நவீன அடிமைத்தனமாகிய மனித வர்த்தகம், கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், மனித உறுப்புக்கள் வர்த்தகம் ஆகியவை மிகவும் மோசமானது, தவறானது, மனித நேயமற்ற செயல் என்று தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 2 திங்கள் கிழமை வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் அனைவரும் உயிருள்ள கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மனித வர்த்தகம், கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள், மனித உறுப்புக்கள் வர்த்தகம் போன்ற நவீன  அடிமைத்தனங்கள் மிக தவறானது, மனித நேயமற்ற செயல், நாம் அனைவரும் உயிருள்ள கடவுளின் சாயல்களாகப் படைக்கப்பட்டுள்ளவர்கள். எனவே மனிதர்களை மோசமான நிலைக்கு உட்படுத்துவதை நாம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளக் கூடாது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 December 2024, 14:04