உலகிற்குத் தேவைப்படும் ஞானத்தின் ஆசிரியர்களாக இருங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒரு குறிக்கோள், சந்தேகத்திற்கு இடமின்றி உயர்ந்தது, இது சமூக மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஒவ்வொருவரின் கைவினைத்திறன் வழியாக அடையப்படுகிறது, இது மனித மற்றும் ஆன்மிக உருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது, இது திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் ஒளியில் எப்போதும் மாறிவரும் சமூகப் பிரச்சனைகளை உறுதியாக சமாளிக்க உதவுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஸ்பெயினின் டோலேதோவிலுள்ள காரித்தாஸ் அமைப்பின் தூதுக்குழுவைத் அதன் 60-ஆம் ஆண்டு பணிநிறைவையொட்டி திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, தொடர்ந்து அர்ப்பணம் நிறைந்த மனதுடன் பணியாற்றுமாறு அவர்களை உற்சாகப்படுத்தினார்.
ஒரு தனிநபருக்குச் செய்யக்கூடிய உறுதியான நன்மைகளைத் தாண்டி, தொண்டு மற்றும் நீதியின் உணர்வைப் பரப்புவதன் வழியாக சமூகத்தில் மாற்றத்திற்கான ஓர் இயந்திரமாக இருக்க வேண்டும் என்ற சவாலை ஏற்றுக்கொண்டு, அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றும், நல்லவர்கள் அதிக சகோதர மனசாட்சியுடன் இருப்பார்கள் என்றும், அவர்களுக்கு எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இவ்வாறு செய்வதன் வழியாக, நீங்கள் குடிமை மனப்பான்மை மற்றும் பிறரன்புப் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமல்ல, அனைவருக்கும் புரியும் மொழியான தொண்டு என்பதன் வழியாக, நற்செய்தி அறிவிப்பின் கருவிகளாகவும் மாறுகிறீர்கள் என்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கிறிஸ்துவிடமிருந்து, அவருடைய வார்த்தையைப் படிப்பதிலிருந்து, அருளடையாளங்களின் அனுபவத்திலிருந்து, அவருடைய மேய்ப்பர்களின் குரலைக் கவனமாகக் கேட்டு, அவருடைய நற்கருணை மற்றும் நீங்கள் பணியாற்றும் மக்களின் பிரசன்னத்திலிருந்து எப்போதும் கற்றுக்கொண்டு, இந்த முயற்சியில் முன்னேற உங்களை ஊக்குவிக்கிறேன் என்றும் உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்