உரோமை திருமுழுக்கு மறைத்தூதுப் பணியகத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை உரோமை திருமுழுக்கு மறைத்தூதுப் பணியகத்தின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

இயேசுவை நம்புங்கள், உங்கள் இதயங்களை வலிமையடையச் செய்யுங்கள்!

கடவுளின் அன்பிலிருந்து எதுவும் எவராலும் நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது பொதுவான உறுதியை நமது இந்தச் சந்திப்பு புதுப்பிக்கட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவர்களுக்கு இடையேயான உடன்பிறந்த ஒத்துழைப்பு என்பது ஓர் அடையாளம், ஒரு சாட்சி மற்றும் அனைவருக்கும் நன்மைக்கான நற்செய்தி அறிவிப்பின் முதல் கருவியாகும் என்றும், மறையுண்மை  வழிகளில், நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட செயல்களின் ஒன்றிப்பு பரஸ்பர அறிவு மற்றும் நன்மதிப்பின் வழியாக விசுவாசத்தின் முழு ஒன்றிப்புக்கு நம்மை அது நெருக்கமடையச் செய்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

டிசம்பர் 12, வியாழன் இன்று, இத்தாலியில் உள்ள உரோமை திருமுழுக்கு மறைத்தூதுப் பணியகத்தின் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, அவர்கள் பணியாற்றும் மக்கள் அனைவருக்கும் தனது உடன்பிறந்த உறவின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உரைத்தார்.

முன்னதாக, தான் அவர்கள் அனைவரையும் ஒரே இறைத்தந்தையின் பிள்ளைகளாகவும் கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் வரவேற்பதாகவும் கூறிய திருத்தந்தை, இயேசுவினுடைய காயங்களால் நாம் குணமாக்கப்பட்டோம்; மற்றும் இறைநம்பிக்கை, தொண்டு மற்றும் எதிர்நோக்கின் திருப்பயணத்தில் நாம் அவரது சக பயணிகளாக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

கடவுளின் அன்பிலிருந்து எதுவும் எவராலும் நம்மைப் பிரிக்க முடியாது என்ற நமது பொதுவான உறுதியை இந்தச் சந்திப்பு புதுப்பிக்கட்டும் என்று தெரிவித்த திருத்தந்தை, இந்த உறுதியானது, கடின உழைப்புத் தொண்டு வழியாகவும், இறைவேண்டல் மற்றும் பணியின்  சில பகிரப்பட்ட அனுபவங்கள் வழியாகவும் நம்மை நம்பிக்கைக்குரிய சான்றுகளாக மாற்றட்டும் என்றும் கூறினார்.

கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடத் தயாராகும் இவ்வேளையில், ​​நம்முடைய பொதுவான இல்லமாகிய இந்தப் பூமிக்குரிய திருப்பயணம், "நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு" (காண்க. திபா 27:14) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளை உள்ளத்தில் கொள்ளத் தூண்டட்டும் என்று உரைத்த திருத்தந்தை, இயேசுவை நம்புங்கள், வலிமையுடன் இருங்கள், உங்கள் இதயங்களை வலிமையடையச் செய்யுங்கள் என்றும் அவர்களைக்  கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2024, 12:44