கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ள திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ள திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை  

அஜாக்சியோ திருத்தூதுப்பயணத்தின் இலச்சினை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்ல ஒரு மேய்ப்பராக தனது மந்தையின் நடுவில் கடந்து செல்ல, கோர்சிகா தலத்திருஅவைக்கு வருகை தருகின்றார் என்பதை அடையாளப்படுத்துகின்றது இந்த இலச்சினை

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடலைக்குறிக்கும் பின்னனியில் முழுவதுமான நீல பச்சை நிறத்தில் இடம்பெற்றுள்ள இந்த இலச்சினையின் இடது ஓரத்தில் சிறியதும் பெரியதுமாக 5 ஊதா நிறக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. அதில் இறுதிக்கு முந்தையதும் மிக நீளமானதுமான கோடானது சிலுவையாக முடிவடைகின்றது. சிலுவையின் மேற்புறத்தில் காணப்படும் மஞ்சள் நிறமானது தூய ஆவியின் உடனிருப்பையும், கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகின்றது. அதே மஞ்சள் நிறத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கோர்சிகாவில் என்று பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதன் கீழே வெள்ளை நிறத்தில் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இறைவார்த்தையான இயேசு எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார் என்ற இறைவார்த்தையும் பொறிக்கப்பட்டுள்ளன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்ல ஒரு மேய்ப்பராக தனது மந்தையின் நடுவில் கடந்து செல்ல, கோர்சிகா தலத்திருஅவைக்கு வருகை தருகின்றார் என்பதை அடையாளப்படுத்துகின்றது இந்த இலச்சினை. மேலும் கோர்சிகா பாதுகாவலியான அன்னை மரியின் திருஉருவப்படமானது வரையப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு இடுப்பளவு கடல் நீரில் மூழ்கியிருந்து கைகளை மேல் நோக்கி எழுப்புவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. கீழே மஞ்சள் நிறத்தில் திருத்தந்தை பிரன்சிஸ் அவர்கள் கோர்சிகா தீவிற்கு வருகை தரும் நாளான டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை என்பதும் இடம்பெற்றுள்ளது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 December 2024, 17:39