உரோம் கூரியா உறுப்பினரகளுடன் திருத்தந்தை உரோம் கூரியா உறுப்பினரகளுடன் திருத்தந்தை 

கிறிஸ்துமஸ் பரிசாகப் புத்தகங்களைப் பரிசளித்த திருத்தந்தை

அருள் என்பது ஓர் சந்திப்பு. கடவுள் நம்மை நிபந்தனையற்ற வகையில் அன்பு செய்கிறார் என்றால் எதற்காக கட்டளைகள் என்ற பொருளில் உள்ள புத்தகத்தின் ஆசிரியர் தோமினிக்கன் சபையைச் சார்ந்த எழுத்தாளர் Adrien Candiard ஆவார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உரோமன் கூரியாவிற்கு, அருள் என்பது ஓர் சந்திப்பு மற்றும் மகிமையின் நன்மை என்பது இல்லாதவர்களுக்காக என்னும் வத்திக்கான் பதிப்பகத்தாரின் இரண்டு புத்தகங்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 21 சனிக்கிழமை வத்திக்கானில் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து தெரிவிக்கும்பொருட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்திக்க வந்த உரோமன் கூரியாவைச் சார்ந்தவர்களுக்கு வத்திக்கான் பதிக்கப்பகமான LEV பதிப்பகத்தில் அண்மையில் வெளியாகி இருந்த இரண்டு புத்தகங்களை வழங்கினார் திருத்தந்தை.

(La grazia è un incontro. Se Dio ama gratis, perché i comandamenti?) அருள் என்பது ஓர் சந்திப்பு. கடவுள் நம்மை நிபந்தனையற்ற வகையில் அன்பு செய்கிறார் என்றால் எதற்காக கட்டளைகள் என்ற பொருளில் உள்ள புத்தகத்தின் ஆசிரியர் தோமினிக்கன் சபையைச் சார்ந்த எழுத்தாளர் Adrien Candiard ஆவார். கிறிஸ்துவின் மழைப்பொழிவு, அவரது இறையரசு பற்றி மகிழ்வின் போதனைகளை உள்ளடக்கியது இப்புத்தகம்.

ஒவ்வொரு நபரிடமும் கடவுளின் அருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், "ஒருவரின் இதயத்தின் பாதையை அறிந்துகொள்வதற்கும்" மற்றும் ஒருவரின் வாழ்க்கையை ஓர் எல்லையில் சுதந்திர மனநிலையில் நங்கூரமிடுவதற்கான கிறிஸ்தவர்களுக்கான திறவுகோல்களை இப்புத்தகம் வழங்குகிறது.

La gloria dei buoni a nulla. Guida spirituale per accogliere l’imperfezione மகிமையின் நன்மை இல்லாதவர்களுக்காக என்னும் புத்தகமானது, நிறைவின்மையை வரவேற்பதற்கான ஆன்மிக வழிகாட்டி நூலாக உள்ளது. இதன் ஆசிரியர் Sylvain Detoc. தோமினிக்கன் சபையைச் சார்ந்தவரும் இறையியல் முனைவருமான Sylvain Detoc அவர்கள் தனது புத்தகத்தில், மனித ஆன்மாவைப் பற்றிய ஒரு உண்மையுள்ள நுண்ணறிவை விவிலிய வார்த்தைகளின் அறிவாற்றலுடன் ஒருங்கிணைக்கிறார்.

 "மீட்பு ஒரு கோட்பாடு அல்ல, அது ஓர் அனுபவம்" என்பதை நமக்கு நினைவூட்டி, பல தவறான எண்ணங்களை இடமாற்றம் செய்து, கிறிஸ்தவ நம்பிக்கையின் விடுதலைப் பார்வையை வழங்குகிறது இப்புத்தகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2024, 15:36