திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.  (AFP or licensors)

வாழ்வின் பொன்னான நேரங்களைக் கணக்கிடுவதற்கான காலம் யூபிலி

தூய ஆவியார் நமக்கு என்ன எடுத்துரைக்கின்றார் என்பதைப் பற்றி சிந்திக்கவும் நினைவுகூரவும் செவிசாய்க்கவும் அழைப்புவிடுக்கும் காலம் யூபிலி

மெரினா ராஜ் – வத்திக்கான்

யூபிலிகள் என்பது தனி மனிதர்களாகவும் சமூகமாகவும் நாம் நமது வாழ்க்கையின் பொன்னான நேரங்களைக் கணக்கிடுவதற்கான காலம் என்றும், தூய ஆவியாரின் குரலுக்கு செவிமடுத்து வாழ்வதற்கான அழைப்பின் காலம் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 23 திங்கள் கிழமை ஹேஸ்டாக் யூபிலி ஆண்டு 2025 என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கேட்கச்செவி உடையோர் திருஅவைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும் என்ற திருவெளிப்பாடு நூலின் இறைவார்த்தைகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

தனிப்பட்ட நபர்கள் மற்றும் சமூகங்களாக நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வின் மிகச்சிறப்பான பொன்னான நேரங்களைக் கணக்கிடுவதற்கான சிறந்த நேரம் யூபிலிகள் என்றும், இக்காலகட்டத்தில் தூய ஆவியார் நமக்கு என்ன எடுத்துரைக்கின்றார் என்பதைப் பற்றி சிந்திக்கவும் நினைவுகூரவும் செவிசாய்க்கவும் அழைப்புவிடுக்கும் காலம் என்றும் என்றும் அச்செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2024, 13:26