வாரும் ஆண்டவரே வாரும் என்ற எதிர்நோக்கோடுக் காத்திருப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கிறிஸ்து பிறப்பிற்காக நம் உள்ளங்களைத் தயார் செய்யும் இத்திருவருகைக் காலத்தில், மீட்பரின் வருகைக்காக நாம் நம்மையேத் தயாரித்துக் காத்திருப்போம் என்றும், வாரும் ஆண்டவரே வாரும் என்று நம்பிக்கையோடும் எதிர்நோக்கோடும் அவரை நோக்கி கூவி அழைப்போம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை ஹேஸ்டாக் திருவருகைக் காலம் என்ற தலைப்பில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய தூய ஆண்டாகிய யூபிலி ஆண்டு அண்மையில் வர இருக்கின்றது என்றும் அச்செய்தியில் நினைவுபடுத்தியுள்ளார்.
மீட்பரின் வருகைக்காக நம்மைத் தயாரிக்கும் இத்திருவருகைக் காலத்திலும் அண்மையில் வர இருக்கும் புதிய ஆண்டாம் தூய யூபிலி ஆண்டில் வாரும் ஆண்டவரே வாரும் என்ற நம்பிக்கையுடன் இறைவனை வரவேற்றுக் காத்திருப்போம் என்று தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்