மேலே அமர்ந்திருக்கும் மூவரில் நடுவில் இருப்பவர் Giuseppe Pignatone மேலே அமர்ந்திருக்கும் மூவரில் நடுவில் இருப்பவர் Giuseppe Pignatone  (AFP or licensors)

வத்திக்கான் நீதிமன்றத்தின் ஓய்வுபெறும் தலைவருக்குத் திருத்தந்தை பாராட்டு!

Giuseppe Pignatone அவர்கள் 2012 முதல் 2019 வரை உரோமையின் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அந்த ஆண்டு திருத்தந்தை, அவரை வத்திக்கானின் வாழ்க்கை தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான நீதிமன்றத்தை வழிநடத்த நியமித்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கான் நீதிமன்றத்தின் ஓய்வுபெறும் தலைவர் Giuseppe Pignatone அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவித்ததாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

வத்திக்கான் நீதித்துறை உறுப்பினர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு 75 வயதை எட்டிய நிலையில்  திருத்தந்தை, அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 11, இப்புதனன்று அறிவித்தது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 10, இச்செவ்வாய்கிழமை பிற்பகல் Pignatone அவர்களைச் சந்தித்து, இந்த ஆண்டுகளில் அவர் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார் என்றும், அவரது பதவி விலகல் டிசம்பர் 31, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

Pignatone அவர்கள் 2012 முதல் 2019 வரை உரோமையின் வழக்கறிஞராகப் பணியாற்றினார், அந்த ஆண்டு திருத்தந்தை, அவரை வத்திக்கானின்  வாழ்க்கை தொடர்பான விடயங்களுக்குப் பொறுப்பான நீதிமன்றத்தை  வழிநடத்த நியமித்தார் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பிஞ்ஞதோனே அவர்கள் திருப்பீடத்தின் நிதிகளின் மேலாண்மை அல்லது சிஸ்டைன் கோவில் பாடகர் குழுவின் நிதி தொடர்பான வழக்கு போன்ற பிற நடவடிக்கைகள் மீதான விசாரணைக்காக 86 விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், இது இச்செவ்வாயன்று நிறைவடைந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1949-ஆம் ஆண்டு,மே மாதம் 8-ஆம் தேதி, சிசிலியன் நகரமான கால்தானிஸ்செத்தாவில் பிறந்த பிஞ்ஞதோனே அவர்கள், 1971-ஆம் ஆண்டில் பலேர்மோ பல்கலைக் கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். அவர் கால்தானிஸ்செத்தாவில் குற்றிவியல் நீதிபதியாகவும், 1977-ஆம் ஆண்டு முதல், குற்றவியல் தொடர்பான துணை வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

2008-ஆம் ஆண்டில், பிஞ்ஞதோனே அவர்கள், நீதித்துறையின் உயர் மன்றத்தால் (CSM) ரெஜ்ஜியோ கலாப்ரியாவின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அதே உயர் மன்றம் அவரை உரோமையின்  வழக்கறிஞராக நியமித்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2024, 12:49