திருவருகைக்கால மெழுகுதிரிகள் திருவருகைக்கால மெழுகுதிரிகள் 

திருவருகைக்காலம் அருளின் காலம்

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கவும், இறைவனின் மன்னிப்பு என்னும் கொடையைப் பெறுவதற்குமான அருளின் காலம் திருவருகைக் காலம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருவருகைக் காலம் என்பது நாமே சுயமாக தனித்து இயங்கக்கூடியவர்கள் என்ற எண்ணத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கும், நாம் செய்த குற்றங்களுக்கு பாவமன்னிப்பு பெறுவதற்குமான ஓர் அருளின் காலம் என்று தனது டுவிட்டர் வலைதளப் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 14 சனிக்கிழமை புனித சிலுவை அருளப்பரின் நினைவுநாளன்று ஹேஸ்டாக் திருவருகைக்காலம் என்ற தலைப்பில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் தனித்து இயங்கக்கூடியவர்கள் என்ற எண்ணத்திலிருந்து விடுபடவும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தி  இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கவும், இறைவனின் மன்னிப்பு என்னும் கொடையைப் பெறவும், நாம் காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்கவுமான ஓர் அருளின்காலம் திருவருகைக் காலம் என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 December 2024, 14:58