தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் 2வது உலக நாள் செய்தியாளர் கூட்டம் தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் 2வது உலக நாள் செய்தியாளர் கூட்டம் 

தாத்தாக்கள் பாட்டிகள் உலக நாளுக்கு மேய்ப்புப்பணி வழிகாட்டிகள்

“தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் பராமரிப்பு: நீண்டகால மேய்ப்புப்பணிக்கு அடித்தளங்களை அமைத்தல்” என்ற தலைப்பில் மேய்ப்புப்பணி வழிகாட்டுதல் ஏடு தயாரிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற ஜூலை மாதம் சிறப்பிக்கப்படவிருக்கும், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் இரண்டாவது உலக நாளின் மேய்ப்புப்பணித் தயாரிப்புகளுக்கு உதவியாக, அனைத்து மறைமாவட்டங்களுக்கும் வழிகாட்டுதல் ஏடு ஒன்றை வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

மே 31 இச்செவ்வாயன்று, பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி வழிகாட்டுதல்கள், உலகின் அனைத்து மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், மற்றும், திருஅவைக் குழுமங்களுக்கு உதவுவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும், இவை அனைத்து மறைமாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது உலக நாளுக்கென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி, அதிகாரப்பூர்வ செபம், வயதுமுதிர்ந்தோர் பற்றிய திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரைகள் ஆகியவை உட்பட, சில மேய்ப்புப்பணி மற்றும், திருவழிபாடு சார்ந்த பரிந்துரைகளை, அவ்வழிகாட்டுதல்களில் அத்திருப்பீட அவை வழங்கியுள்ளது.

Apostolic Penitentiary என்ற திருப்பீட நீதிமன்றமும், தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் இரண்டாவது உலக நாளுக்கென்று நிறைபேறுபலன்களை அறிவித்துள்ளது பற்றியும் அத்திருப்பீட அவை குறிப்பிட்டுள்ளது.

“தாத்தாக்கள் பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர் பராமரிப்பு: நீண்டகால மேய்ப்புப்பணிக்கு அடித்தளங்களை அமைத்தல்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மேய்ப்புப்பணி வழிகாட்டுதல் ஏடு, வரவிருக்கும் ஆண்டுகளில் அவர்கள் மீது அக்கறை காட்டப்படவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2022, 14:54