கர்தினால் Krajewski   கர்தினால் Krajewski  

உதவிப்பொருள்களுடன் மீண்டும் கர்தினாலின் உக்ரைன் பயணம்

போரால் துயருறும் உக்ரைன் நாட்டு மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக மேலும் மூன்று இலட்சம் யூரோக்கள் மக்களால் வழங்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

போரால் துயருறும் உக்ரைன் நாட்டு மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக மேலும் மூன்று இலட்சம் யூரோக்கள் மக்களால் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உக்ரைன் மக்களுக்குத் தேவையான குளிர்காலப் பொருள்களுடன் மீண்டும் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார் கர்தினால் Konrad Krajewski.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பாளரான கர்தினால்  Krajewski அவர்கள், குளிரைத் தாங்கும் வெப்ப உடைகளுடனும், மின்னாக்கி (GENERATORS) சாதனங்களுடனும் உக்ரைனின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல உள்ளதாகத் தெரிவித்தார்.

ஏற்கனவே, கர்தினால் Krajewski அவர்கள், கிறிஸ்துபிறப்பு விழாவிற்கு முன்னர் 40 மின்னாக்கி சாதனங்களுடனும், குளிரைத் தாங்கும் வெப்ப ஆடைகளுடனும் தானே வாகனம் ஒன்றை ஓட்டிச்சென்று போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களோடு இணைந்து போர்ப்பகுதியிலேயே கர்தினால் Krajewski கிறிஸ்துபிறப்பு விழாவைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2023, 14:56