கர்தினால் Miguel Ángel Ayuso Guixot கர்தினால் Miguel Ángel Ayuso Guixot 

வத்திக்கான் - முஸ்லீம் முதியோர் சங்கம் ஒப்பந்தம் கையெழுத்தானது

உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களிடையே உரையாடல் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்துவதே முஸ்லீம் முதியோர் சங்க ஒப்பந்தத்தின் குறிக்கோள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கூட்டு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்தவும், மனித சகவாழ்வு மற்றும் சகோதரத்துவத்தை உலகளவில் பரப்புவதற்கான ஊக்கமளிக்கும் முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஊக்கப்படுத்தவும்  முஸ்லீம் முதியோர் சங்கத்துடன் வத்திக்கான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகக் கூறினார்  கர்தினால் Ayuso Guixot.

கடந்த மார்ச் 6ஆம் தேதி முஸ்லீம் முதியோர் சபையின் பொதுச் செயலாளர் அப்தெல்சலாம் மற்றும் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான துறையின் தலைவர் கர்தினால் Ayuso Guixot ஆகியோர் கையெழுத்திட்ட இவ்வொப்பந்தமானது, முஸ்லீம் முதியோர் சங்கம், மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான துறை ஆகியவற்றிற்கு இடையே இஸ்லாமிய-கிறிஸ்தவ உரையாடலுக்கான நிரந்தர கூட்டுக் குழுவை உருவாக்க வழிவகை செய்வதற்காக கையெழுத்திடப்பட்டது.

முஸ்லீம் முதியோர் சங்கம் மற்றும் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான துறை ஆகியவை இணைந்து உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களிடையே உரையாடல் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

கர்தினால் Guixot : மனித உடன்பிறந்த உறவிற்கான பங்களிப்பு

Imam di Al-Azhar, Ahmed Al-Tayeb தலைமையில் உருவான முஸ்லீம் முதியோர் சங்கத்தின் முயற்சிகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த, கர்தினால் Guixot திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இமாமுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்தார். இது உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான மதத்தினருக்கு உத்வேகமாக மாற, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் கூறினார்.

கூட்டு ஒத்துழைப்பு முயற்சிகளை வலுப்படுத்தவும், மனித சகவாழ்வு மற்றும் சகோதரத்துவத்தை உலகளவில் பரப்புவதற்கான ஊக்கமளிக்கும் முயற்சிகள் மற்றும் திட்டங்களை மேலும் ஊக்கப்படுத்த உதவும் என்று கூறினார்  கர்தினால் Ayuso Guixot.

அப்தெல்சலாம்: சகவாழ்வில் ஒரு படி முன்னேற்றம்

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் இடையே உள்ள சகவாழ்வின் வரலாறு, அதில் உள்ள கொள்கைகளின் அடிப்படையில் இஸ்லாமிய-கிறிஸ்தவ உரையாடலில் முயற்சிகளை வலுப்படுத்தும் கட்டமைப்பிற்கு பொருந்தும் என்று கூறிய முஸ்லீம் முதியோர் சங்கத்தின் பொதுச் செயலாளர், நீதிபதி முகமது அப்தெல்சலாம், உலக அமைதி மற்றும் சகவாழ்வுக்கான மனித உடன்பிறந்த உறவு குறித்த ஆவணம், 2019 ஆம் ஆண்டில் அபுதாபியில் Ahmed Al-Tayeb மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கையொப்பமிடப்பட்டதையும் இன்றைய சவால்களை சமாளிக்க ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் நினைவு கூர்ந்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2023, 13:51