அன்பால் திருத்தந்தையுடன் இருக்கிறோம் - கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பாலும் செபத்தாலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவரது உடல் நலனுக்காக செபிப்பதாகவும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்
ஜூன் 7, புதன்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறுவை சிகிச்சைக்காக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று பிற்பகலில் வியூ பாயிண்ட் என்னும் 2025ஆம் ஆண்டு ஜூபிலி தகவல் விவரங்களுக்கான பணியைத் துவக்கி வைத்தபின் செய்தியாளர்களுக்கு இவ்வாறு கூறினார் கர்தினால் பரோலின்.
ஜூபிலி ஆண்டில் பங்கேற்கும் அனைத்து திருப்பயணிகளுக்கும் தகவல் மற்றும் வரவேற்பு மையமாக வியா தெல்லா கொன்சிலியாட்சியோனே பகுதியில் ஒரு மையத்தை திறந்து வைத்து அதன் செபவழிபாட்டிலும் கலந்து கொண்டார் கர்தினால் பரோலின்.
திருத்தந்தை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பியவுடன் அமைதிக்கான பணிகள், முயற்சிகள் பற்றிய செயல்திட்டங்கள் ஒப்படைக்கப்படும் என்றும், கர்தினால் ஷூப்பி அவர்களின் கீவ் பயணம், மற்றும் கலந்துரையாடல் பற்றியும் திருத்தந்தையிடம் எடுத்துரைக்கப்படும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்