நம்பிக்கை, அமைதி மற்றும் நீதிக்கான ஒருங்கிணைந்த பயணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நம்பிக்கை என்பது வாழ்க்கையின் இருண்ட மற்றும் மிகவும் கொந்தளிப்பான தருணங்களின் பாதையில் ஓர் ஒளியை ஒளிரச் செய்கிறது என்றும், கடவுளின் இரக்க நிழல்களில் ஊடுருவுவதைக் காண அனுமதிக்கிறது என்றும் கூறினார் மியான்மாரின் கர்தினால் Charles Maung Bo.
அக்டோபர் 22 இஞ்ஞாயிறன்று வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய ஆயர்கள் மாமன்றத் திருப்பலியில் 'நம்பிக்கை, அமைதி மற்றும் நீதியின் ஒன்றிணைந்த நீண்ட திருப்பயணம்’ என்ற தலைப்பில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார்.
வாழ்க்கையிலும் நம்பிக்கையிலும் நாம் பல்வேறு பயணங்களைத் தொடங்கும்போது, நம்முடைய இலக்கை நாம் அடிக்கடி நிச்சயமற்றதாகக் காண்கிறோம், இருப்பினும், நமது அசைக்க முடியாத நம்பிக்கையால் வழிநடத்தப்படும் தெரியாதவற்றிற்குள் நாம் செல்ல அழைக்கப்படுகிறோம்" என்று விளக்கிய கர்தினால் போ அவர்கள், ஆபிரகாமின் நம்பிக்கை அவரை நியாயப்படுத்தியது போல், கடவுள் எப்பொழுதும் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார் என்று நம்பி நாமும் நமது நம்பிக்கையால் நீதிமான்களாக்கப்படுகிறோம் என்றும் கூறினார்.
நமது ஒன்றிணைந்த பயணம் என்பது கடவுள் நம்மை அழைக்கும்போது, அவர் நமக்கு வழிகாட்டியாகவும், நமது பாதையின் வரைபடமாகவும், நம் துணையாகவும் மாறுகிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது என்றும் விளக்கினார் கர்தினால் போ.
ஆபிரகாமைப் போலவே, திருஅவையும் நீதியுள்ளதாக இருக்க அழைக்கப்பட்டது என்றும், கடவுள் ஒருபோதும் தோல்வியடையமாட்டார் என்ற நம்பிக்கையுடன் நம்பிக்கையின் அடியப்படையிலான ஓர் ஒன்றிணைந்த பயணத்தை நாம் பயணத்தை உருவாக்க வேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் போ
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்