ஐ.நா.விற்கான திருப்பீட நிரந்தரப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா ஐ.நா.விற்கான திருப்பீட நிரந்தரப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா 

சட்டம் தனிமனிதனின் தன்னிச்சையான விருப்பம் அல்ல

எந்தவொரு நீதியான சமூகமும் சட்டத்தின் கொள்கையின் அடிப்படையில், தனிமனிதன் மற்றும் சமூகத்தின் உரிமைகளை மீறக் கூடாது.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்   

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் 78-வது பொதுச் சபையின் (UNGA) முதல் குழுவில் உரையாற்றியபோது, எந்தவொரு நீதியான சமூகமும் சட்டத்தின் கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும், மற்றவர்களின் அல்லது சமூகங்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை மீறும் அதிகாரத்தை கோரக்கூடாதென  வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐ.நா.விற்கான திருப்பீட நிரந்தரப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா.

சட்டத்தின் முன் சமத்துவம், பொறுப்புக்கூறல், அதிகாரங்களைப் பிரித்தல், முடிவெடுப்பதில் பங்கேற்பு, சட்ட உறுதிப்பாடு, உரிய செயல்முறை, அத்துடன் நடைமுறை மற்றும் சட்டம் ஆகிய இரண்டிலும் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையின் துவக்க சாசனத்தின் படி, உலகளாவிய சகோதரத்துவத்தின் இலட்சியத்தை அடைவதற்கு நீதி ஓர் இன்றியமையாத நிபந்தனை என்று குறிப்பிட்டுள்ளார் பேராயர் காச்சா.

உலகளாவிய சகோதரத்துவத்தை அடைவதற்கும், மோதல்கள் அமைதியான முறையில் தீர்க்கப்படுவதற்கும், அதிக சக்தி வாய்ந்தவர்களின் சட்டம் மேலோங்காத ஓர் உலகத்தை உருவாக்குவதற்கும் நீதி இன்றியமையாதது, சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, சாசனத்தின் தேவைக்கேற்ப, பேச்சுவார்த்தை, மற்றும் நடுநிலை தீர்ப்பு ஆகியவற்றிற்கு நிலையான உதவியை மேற்கொள்வது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார் பேராயர்.

சட்டத்தின் ஆட்சி உலகம் முழுவதும் புதிய சவால்களை எதிர்கொள்கிறது, சர்வதேச அளவில் சர்வதேச ஒழுங்கு கட்டமைக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளை மீறும் புதிய ஆயுத மோதல்கள் உள்ளதாகவும், அதேசமயம், தேசிய அளவில், நிறுவப்பட்ட அரசியலமைப்பு ஒழுங்கை மீறும் வகையில், அதிகாரத்தின் வன்முறை மாற்றங்களின் ஆபத்தான அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மோதல்களின் தீவிரம் அதிகரிப்பதாகவும், இந்த நிகழ்வுகள் சட்டத்தின் ஆட்சிக்கான நமது உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடாது, என திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளபடி, சட்டத்தின் ஆட்சி மனிதரின் சேவையில் நிற்கிறது மற்றும் ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவே, அவசர காலங்களில் கூட சட்டத்தின் விதிக்கு விதிவிலக்குகள் இருக்க முடியாது என்று  கூறியுள்ளார்.

நீதிக்கான அணுகலை மேம்படுத்த தொழில்நுட்பத்தின் திறனை நாம் பயன்படுத்துவதன் மூலம், அதிக பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை உருவாக்கலாம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கும் அதன் பலன்களில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கலாம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தீங்கு விளைவிக்கும், ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கலாம், பெண்களை விகிதாசாரமாக பாதிக்கலாம் மற்றும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பாகுபாடுகளை வளர்க்கலாம், என்ற பேராயர் காச்சா, நமது காலத்தின் சிக்கலான நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் சம வாய்ப்புகளுடனும் முழு மரியாதையுடனும் அமைதியான சமூகங்களை உருவாக்குவதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2023, 16:35