திருப்பலியின் போது கர்தினால் பியத்ரோ பரோலின் திருப்பலியின் போது கர்தினால் பியத்ரோ பரோலின் 

சந்திப்பு மற்றும் உரையாடல் நம்பிக்கையை வளர்க்கின்றது

திருப்பலியில் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி, Alessandro Zurzolo , இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள், அருள்பணியாளர் Giuseppe Puscedu, மருத்துவமனையில் பணியாற்றும் சகோதரர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுக்கான பாரம்பரியமான சந்திப்புக்கள் நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையிலான உறவையும் விலைமதிப்பற்ற நேரத்தையும் வழங்குகின்றது என்றும், நோயாளர்களிடத்தில் கவனமுடன் செயல்படும் ஒன்றிணைந்த அர்ப்பணமுள்ள  பணியின் வழியாக நம்பிக்கையினால் ஒன்றிணைகின்றோம் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

டிசம்பர் 23 சனிக்கிழமை வத்திக்கானின் IDI எனப்படும் அமல அன்னை (Dermopathic Institute of the Immacolat) டெர்மோபதி மருத்துவமனை நிறுவன ஆலயத்தில் நோயாளிகள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்களுடன் திருப்பலி நிறைவேற்றினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு இடையிலான உரையாடல் என்பது அனைவருடைய நலனுக்கான ஒரு வழிவகை என்றும், மருத்துவமனையின் வரலாற்றினை எல்லாருக்கும் எடுத்துரைத்து நல்ல பலனையும் மகிழ்வையும் அளிப்பதற்கான வாய்ப்பு என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.    

இத்திருப்பலியில் தலைமை நிர்வாக அதிகாரி, Alessandro Zurzolo மற்றும் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள், அருள்பணியாளர் Giuseppe Puscedu, மருத்துவமனையில் பணியாற்றும் சகோதரர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2023, 13:54