மரண தண்டனை என்பது குற்றத்திற்கு சரியான பதிலாக இருக்க முடியாது
மெரினா ராஜ் – வத்திக்கான்
பொதுநலனைப் பாதுகாத்தல், பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்கு மேலாக, தண்டனைகள் என்பது "சீர்திருத்தம், மேம்படுத்தல், கல்வி கற்றல் போன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்" என்றும், மரண தண்டனை என்பது குற்றத்திற்கு சரியான பதிலாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.
ஏப்ரல் 3 புதன்கிழமை நியுயார்க்கில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. அவையின் 78வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Gabriele Caccia.
மாநிலக் கட்சிகள் அன்னைத்தும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் உறுதியான குற்றங்களாகத் தங்கள் உள்நாட்டுச் சட்டங்களில் உறுதி செய்ய வேண்டும் என்றும், புதிய ஒப்பந்தத்தின் வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக இது அமையும் என்றும் கூறியுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.
பொறுப்பில் இருப்பது என்பது தனிப்பட்ட குற்றத்திற்கானப் பொறுப்பைத் தவிர்த்தல், சட்ட ஆட்சியைப் பற்றி விவாதித்தல், அல்லது திருத்துதல் போன்றவற்றிற்கான இடமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும்
மாநில இறையாண்மை, மற்றும் கொள்கை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆற்றல், மாநிலங்களுக்கு இடையே அமைதியான மற்றும் நட்பு உறவுகளுக்கு இன்றியமையாதது என்றும், வலியுறுத்தியுள்ளார் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்