போர் நிறுத்தத்திற்கான பதாகை போர் நிறுத்தத்திற்கான பதாகை  (ANSA)

அமைதிக்காக உங்களை நீங்களே தயார் செய்யுங்கள்

போர்ச்சூழலில் செய்யும் இரக்கமுள்ள பல செயல்கள், வீரதீர செயல்களாக பிறரன்புச் செயலின் பலனாக மாறுகின்றது - பேராயர் Kulbokas

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமைதி உங்களுக்கு வேண்டுமென்றால் அமைதிக்காக உங்களை நீங்கள் தயார் செய்யுங்கள் என்றும், வாழ்வின் சவால்களை இதயத்திற்கு எடுத்துச்சென்று துன்புறும் மக்களுக்கு உதவும் சமூகத்தின் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்   பேரருள்திரு Visvaldas Kulbokas

ஆகஸ்ட் 20 முதல் 25 வரை ரிமினியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் உலக நாடுகளுக்கான அமைதியைப் பற்றி நடைபெற்ற குழு விவாதத்தின்போது இவ்வாறு கூறியுள்ளார் உக்ரைன் நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் Visvaldas Kulbokas.

உக்ரைன் மீதான இரஷ்யப் படையெடுப்பின் தொடக்கத்தை நினைவுகூர்ந்த பேராயர் Kulbokas அவர்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்க வைக்கும் ஒற்றுமையின் பல நிகழ்வுகளை வலியுறுத்தி அமைதி விரைவில் நம்மில் நிலைக்கும் என்றும் கூறியுள்ளார்.

உக்ரைனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அடிப்படை உதவிகள் குறித்து தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கையில் உக்ரைன் நாட்டைச்சார்ந்த பெண் ஒருவர் 6 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவியைத் தனக்கு தெரிந்தவர்கள் பலரின் உதவியுடன் உக்ரைன் மக்களுக்குக் கொண்டு வந்து சேர்த்ததாகத் தெரிவித்துள்ளார் பேராயர் Kulbokas.

போர்ச்சூழலில் செய்யும் இரக்கமுள்ள பல செயல்கள், வீரதீர செயல்களாக பிறரன்புச் செயலின் பலனாக மாறுகின்றது என்று என்று எடுத்துரைத்துள்ள பேராயர் Kulbokas அவர்கள், எந்த தலத்திருஅவையையும் சாராத நபர் ஒருவர், 280 உக்ரைன் மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர உதவியதையும், பிற கிறிஸ்தவ சபையாரால் 800 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.   

சில சூழ்நிலைகளின் ஆபத்தை முதலில் உணரும் திறன் கொண்டது மக்கள் வாழ்கின்ற சமூகம் தான் என்று  குறிப்பிட்டுள்ள பேராயர் Kulbokas, மகத்தான சவால்களை எதிர்கொள்ளும் போது முயற்சிகள் கூட மகத்தானதாக இருக்க வேண்டும் என்று வாழ்க்கை கற்பிக்கிறது எனவும், போர்கள் எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை என்பது உண்மை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2024, 14:11