Burkina Faso தலத்திருஅவை Burkina Faso தலத்திருஅவை  

புர்கினா பாசோவுக்கும் திருஅவைக்கும் இடையே புது ஒப்பந்தம்

புர்கினா பாசோவிலுள்ள, கத்தோலிக்க திருஅவைச் சட்டங்களில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள், அந்நாட்டின் சட்ட நபர்களுக்குரிய அங்கீகாரம் வழங்குவது குறித்த முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

புர்கினா பாசோவில் உள்ள திருஅவையின் சட்டப்பூர்வ நிலை குறித்த ஒப்பந்தத்திற்கான இரண்டாவது கூடுதல் நெறிமுறையில் திருப்பீடமும் புர்கினா பாசோ நாடும் அக்டோபர் 11, வெள்ளியன்று கையெழுத்திட்டன.

புர்கினா பாசோ நாட்டின் தலைநகர் ஓவாகடூகோவில் (Ouagadougou) உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியில் திருப்பீடத்தின் சார்பில் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Michael Crotty அவர்களும், அரசின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் Karamoko Jean Marie Traore அவர்களும் கையெழுத்திட்டனர்.

புர்கினா பாசோ நாட்டில் திருஅவை அரசு அங்கீகாரம் பெற்றதாக சட்டபூர்வமாக இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இந்த ஒப்பந்தம் ஒரு முன்னுரை, ஏழு தொகுப்புகள், மற்றும் ஒரு பிற்சேர்க்கையையும் கொண்டுள்ளது.

ஏற்கனவே கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் அக்டோபர் 11ஆம் தேதி மீண்டும் இணைக்கப்பட்டுள்ள புதிய விதியின் வழி, புர்கினா பாசோவிலுள்ள, கத்தோலிக்க திருஅவைச் சட்டங்களில் தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள், அந்நாட்டின் சட்ட நபர்களுக்குரிய அங்கீகாரம் வழங்குவது குறித்த முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2024, 15:25