திருப்பீட செய்தியாளர்கள் சந்திப்பின்போது திருப்பீட செய்தியாளர்கள் சந்திப்பின்போது 

ஒப்படைக்கப்பட்ட கடவுளின் மக்களுடன் பயணிப்பவர்கள் ஆயர்கள்

சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களையும் ,ஒதுக்கப்பட்டதாக உணரும் மக்களையும் ஆயர்கள் அணுகிச் செல்ல வேண்டும். திருஅவையின் ஒரு பகுதியாக அவர்களை அழைக்க வேண்டும். - கர்தினால் Robert Francis Prevost.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

ஆயர்கள் வணிக நிர்வாகிகள் அல்ல, அவர்கள் முதன்மையான மேய்ப்புப் பணியாளர்களாக தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடவுளின் மக்களுடன் பயணிப்பவர்கள் என்றும், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களையும், ஒதுக்கப்பட்டதாக உணரும் மக்களையும் ஆயர்கள் அணுகிச் செல்ல வேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறினார் கர்தினால் Robert  Francis Prevost.

விளிம்பு நிலையில் உள்ள மக்களை திருஅவையின் ஒரு பகுதியாக அழைக்க வேண்டும் என்றும், ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்த விவாதத்துடன் அக்டோபர் 23 ஆம் நாள் ஆயர் மாமன்றமானது ஆரம்பமாகியது என்றும் கூறினார் ஆயர்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Robert Francis Prevost.

உலக ஆயர் மாமன்ற பொதுப்பேரவையில் குழு உறுப்பினர்களான ஆயர்களின் பங்கு மற்றும் அதிகாரம், ஒருங்கிணைந்த பயணத்தைப் பிரதிபலிக்கும் திருஅவைச் சட்டத்தின் தேவை, ஆயர் மாமன்றத்தின் கோட்பாட்டு அதிகாரம் மற்றும் கிழக்கு கத்தோலிக்க திருஅவை பற்றியும் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் திருப்பீடச் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் 23 ஆம் தேதி புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆயர் மாமன்றமானது, திருஅவையின் மறைப்பணியை மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகளை மறுசீரமைக்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பு என்று கூறிய  பேராசிரியர் Myriam Wijlens அவர்கள், ஒருங்கிணைந்த பயணச் செயல்பாடுகளில் திருஅவைச் சட்டத்தின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்.

திருஅவைக்குள் உரிமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதால் திருஅவையின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டதுடன், பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை, மதிப்பீடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் பேராசிரியர் Myriam Wijlens.

ஆயர் பேரவைக்கு, புதிய கோட்பாடுகளை முன்மொழியும் அதிகாரம் இல்லை, அனால் திருஅவையுடனும் ,திருத்தந்தையுடனும், ஒன்றித்து செயல்பட வேண்டும் என்றும், திருஅவையின் படிப்பினைகளை மேம்போக்கான கருத்தாக விட்டுவிடாமல், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் தேவைகள் மற்றும் சவால்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று இறையியலாளர் அருள்தந்தை Gilles Routhier  எடுத்துரைத்தார்.

கிழக்கு கத்தோலிக்கர்கள், தங்கள் சொந்த நாட்டைக் கடந்து உலகெங்கும் புலம்பெயர்ந்தவர்களாக பயணித்து, போர் உட்பட பல்வேறு துன்பங்களால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார் அருள்தந்தை Khalil Alwan.

ஆயர் மாமன்றத்தின் போது கிழக்கு கத்தோலிக்கர்கள் திருஅவையின் ஒன்றிப்பை நன்றாக அனுபவித்துள்ளனர் என்றும், பகுத்தறியும் ஆவியால், பிறரின் இரக்கம், புரிதல், நம்பிக்கை ஆகியவற்றையும் ஆயர் மாமன்றத்தில் கண்டதாக கூறிய அருள்தந்தை Khalil.

ஒருவர் ஒருவரிடையேயான புரிந்துணர்வு, பொதுநன்மைக்காக ஒன்றிணைந்து செயல்படுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட உரையாடலுக்கான பாதையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2024, 13:04