இலாம்பெதுசா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் இலாம்பெதுசா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர்  (ANSA)

இலாம்பெதுசா புலம்பெயர்ந்தோர்க்கு நேர்ந்த சோகத்தின் 11ஆவது ஆண்டு

2013 அக்டோபர் 3, அன்று ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள இத்தாலியின் சிசிலியா தீவுக்கு புலம்பெயர்ந்தோரில் ஏறக்குறைய 368 பேர் இறந்தனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து மத்தியதரைக் கடலில் நடைபெற்ற மிக மோசமான கடல் துயரங்களில் ஒன்று இலாம்பெதுசா கடலில் நடைபெற்ற நிகழ்வு என்றும், மனித குலத்தின் திறந்த காயமாகக் கருதப்படும் கடல் துயரங்கள் நிறுத்தப்படவும், காயங்கள் குணப்படுத்தப்படவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார் மாசிமிலியானோ மெனிகெத்தி.

அக்டோபர் 3 வியாழனன்று இலாம்பெதுசா கடலில் புலம்பெயர்ந்தோர்க்கு ஏற்பட்ட சோகமான நிகழ்வின் 11ஆவது ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் செய்திகளின் தலையங்கத்தில் இவ்வாறு தனது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் வத்திக்கான் செய்திகளுக்கான இணைஇயக்குநர் மாசிமிலியானோ மெனிகெத்தி.

2013ஆம் ஆண்டு அக்டோபர் 3, அன்று ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ள இத்தாலியின் சிசிலியா தீவுக்கு புலம்பெயர்ந்தோரில் ஏறக்குறைய 368 பேர் இறந்தனர் என்றும், அன்று முதல் இன்று வரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் மக்களுக்காக செபிக்கவும் அவர்களை வரவேற்கவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக மக்களுக்கு அழைப்புவிடுத்துக் கொண்டிருக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் மெனிகெத்தி.

ஐரோப்பா மட்டுமன்றி, போர்கள், வறுமை, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட உலகம் முழுவதும் இடம்பெயர்வு பிரச்சினையை எதிர்கொள்ளுதலும், பிளவுபடுதலும் தொடர்கிறது என்றும், துயரத்தையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தும் இந்த இடம்பெயர்வுகள் அனைத்தும், அம்மக்களின் முகங்கள், கதைகள் மற்றும் அவர்கள் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர் மற்றும் மோதல்களிலிருந்து தப்பி. சிறந்த எதிர்காலத்தை நோக்கி ஓடும் மக்கள் கடல்கள், பாலைவனங்கள் மற்றும் காடுகளைக் கடக்கும் போது தங்களது உயிரை இழக்கின்றனர் என்றும், மேலும் சிலர் தடுப்பு முகாம்களில் பிணைக்கைதிகளாக் இருக்கும்போது இறந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் மெனிகெத்தி.

புலம்பெயர்ந்தோர் வாழ்வில் அதிகமான முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்தித்தல், உரையாடல், அன்பு செய்தல், ஒன்றிணைந்து நடத்தல், பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணுதல் என்பவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்றும் கூறியுள்ளார் மெனிகெத்தி.

நாம் என்ற நிலையிலிருந்து நாம் என்ற நிலைக்கு மாற வேண்டும் என்று திருத்தந்தையின் வார்த்தைகள் நமக்கு வலியுறுத்துகின்றன என்றும், நம் நினைவையும் பார்வையையும் மீட்டெடுத்தல், நம் கண்ணோட்டத்தை மாற்றுதல் போன்றவற்றின் வழியாக, பிறரில் இயேசுவின் இரக்கமுள்ள முகத்தை அடையாளம் காண நம்மால் முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மெனிகெத்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2024, 14:23