ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆயர் மாமன்ற உறுப்பினர்கள் ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆயர் மாமன்ற உறுப்பினர்கள்  (ANSA)

திருஅவை மற்றும் உலகத்திற்கு இடையேயான உறவைப் பேணுதல் அவசியம்

நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, இணக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நமது உறவைப் பேண வேண்டும்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

திருஅவைக்குள்ளும் திருஅவை மற்றும் உலகத்திற்கு இடையேயான உறவைப் பேணுவதே உலக ஆயர் மாமன்றத்தின் 9 வது நாளின் முக்கிய கருப்பொருள் என்று ஆயர் மாமன்ற செயலர் முனைவர் Sheila Pires கூறினார்.

திருப்பீட சமூகத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் Paolo Ruffini, செயலர் முனைவர் Sheila Pires ஆகியோருடன், அமெரிக்காவின் நெவார்க் மறைவாட்ட கர்தினால் ஜோசப் டோபின், ஐரோப்பாவைச் சார்ந்த முனைவர் Giuseppina De Simone, ஆஸ்திரேலியாவின் Sandhurst மறைமாவட்ட ஆயர் Shane Mackinlay ஆகியோர் தங்களது அனுபவங்களை அக்டோபர் 11, வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பில் எடுத்துரைத்தனர்.

நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, ஒத்திசைவு ஆகியவற்றின் அடிப்படையில் உறவைப் பேண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக எடுத்துரைத்த செயலர் Pires, ஒருங்கிணைந்த உருவாக்கத்தின் அவசியம், திருஅவைக்குள் பணிபுரிபவர்களின் பணியைத் தொடர்ந்து மதிப்பீடு செய்வதன் வழியாக பொறுப்பேற்க வைத்தலின் அவசியம், திருஅவையில் வெளிப்படையான முடிவெடுக்கும் செயல்முறைகளின்  வளர்ச்சிக்கான அழைப்பு என்பன குறித்து கர்தினால் Hollerich அவர்கள் எடுத்துரைத்ததையும் விளக்கினார்.

திருஅவைக்குள் மாற்றத்தின் செயல்முறைகள், நற்செய்தியில் கானானிய பெண் மற்றும் இயேசுவின் தொடர்பு ஆகியவற்றிற்கும் இடையிலான தொமினிக்கன் ஆன்மிக இயக்குநர் அருள்பணி திமோத்தி அவர்களின் ஒப்பீடு ஆகியவை குறித்து எடுத்துரைத்த செயலர் Pires அவர்கள், கானானிய பெண்ணுடனான இயேசுவின் உரையாடலானது வேறுபட்டவர்களைத் திறந்த மனதுடன் வரவேற்கும் பார்வையை வெளிப்படுத்துகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

அடுத்து வரும் நாள்களில் செய்யப்பட உள்ள உலக ஆயர் மாமன்றத்தின் பணிகளின் சுருக்கத்தை முனைவர் Ruffini அவர்கள் வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்  ஆயர் மாமன்றம், தான் கலந்துகொண்ட முந்தைய ஆயர் மாமன்றம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து விவாதித்ததோடு, இறைவேண்டல் மற்றும் அமைதிக்கு ஆயர் மாமன்றம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் எடுத்துரைத்தார் கர்தினால் டோபின்.

உலக ஆயர் மாமன்றம் திருஅவைக்கும், மனிதகுலத்திற்கும் ஏதாவது ஒன்றை வழங்கும் நம்பிக்கையின் பெரிய அடையாளம் என்று கூறினார் முனைவர் De Simone.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2024, 15:39