திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

Ajaccioவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஒரு நாள் திருத்தூதுப்பயணம்

டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் அஜாக்சியோ பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிரான்ஸ் நாட்டின் மத்திய தரைக்கடல் தீவுப்பகுதியாகிய Ajaccio என்னுமிடத்தில் டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் “La religiosité populaire en Méditerranée”  என்னும் கூட்டத்தின் நிறைவு நிகழ்வில் பங்கேற்க ஒருநாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 23 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு நாள் திருத்தூதுப் பயணமாக பிரான்சில் AJACCIO என்னுமிடத்திற்கு டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை காலை உரோம் உள்ளூர் நேரம் 7.45 மணிக்கு புறப்பட உள்ளதாக திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயு புரூனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் உள்ளூர் நேரம் காலை 9 மணியளவில் அஜாக்சியோ பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

அதன்பின்  “La religiosité populaire en Méditerranée”  என்னும் மத்திய தரைக்கடலில்  மதங்களுக்கான கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று உரை வழங்க உள்ள திருத்தந்தை அவர்கள், விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் அம்மறைமாவட்ட ஆயர்கள் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், குருத்துவ மாணவர்களை சந்தித்து உரையாற்றி மூவேளை செப உரையினை வழங்க உள்ளார்.

பிற்பகல் 3.00  மணியளவில் அங்குள்ள மக்களுக்கு திருப்பலி நிறைவேற்ற இருக்கும் திருத்தந்தை  அவர்கள், மாலை 5.30 மணியளவில் அஜாக்சியோ பன்னாடு விமான நிலையத்தில் குடியரசுத்தலைவரை சந்திக்க உள்ளார்.

பிரான்ஸ் உள்ளூர் நேரம் மாலை 6.15 மணியளவில் அஜாக்சியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ள திருத்தந்தை அவர்கள், இரவு 7.00 மணியளவில் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேர்வார்.

ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தில் இரண்டு உரைகளையும் ஒரு திருப்பலி மறையுரையினையும் வழங்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 12:23