மத்திய கிழக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடி எச்சரிக்கை மத்திய கிழக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடி எச்சரிக்கை  (ANSA)

நிலக்கண்ணி வெடிகளின் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கின்றன

மோதல்கள் இடம்பெறும் உக்ரைன், சிரியா மற்றும் மியன்மரில் நிலக்கண்ணி வெடிகள் பயன்படுத்தப்படுவது குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலையை ஐ.நா.வில் வெளியிட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நிலக்கண்ணி வெடிகளை தடைச்செய்யும் ஒப்பந்தம் அமலுக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில், நிலக்கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தையின் ஒருமைப்பாடு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதை நினைவுறுத்தினார் பேராயர் எத்தோரே பலஸ்திரேரோ.

சுவிசர்லாந்தின் ஜெனிவாவிலுள்ள ஐ.நா.அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் பலஸ்திரேரோ அவர்கள், நிலக்கண்ணி வெடிகள் குறித்த ஒப்பந்தம் மீண்டும் ஆய்வு செய்யப்படும் கருத்தரங்கில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்

நிலக்கண்னி வெடிகளின் விளைவுகளை அப்பாவி பொதுமக்கள் கட்டாயமாகச் சுமப்பது, போர்க்கொடுமைகளின் வெளிப்பாடாக உள்ளது என உரைத்த பேராயர், இன்னும் இத்தகைய கொடூர நிலக்கண்ணி வெடிகள், மோதல் இடம்பெறும் பகுதிகளில் புதைக்கப்பட்டு வருவது குறித்து தன் கவலையை வெளியிட்டார்.

மோதல்கள் இடம்பெறும் உக்ரைன், சிரியா மற்றும் மியன்மரில் நிலக்கண்ணி வெடிகள் பயன்படுத்தப்படுவது குறித்து திருப்பீடம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், இந்த கொடூர ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்தவும், பயன்படுத்துவதை தடைச் செய்யவும் குரல் எழுப்புவதாகவும் மேலும் கூறினார் பேராயர் பலஸ்தெரேரோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 16:08