திருத்தந்தையுடன் C9 கர்தினால்கள் கூட்டம் திருத்தந்தையுடன் C9 கர்தினால்கள் கூட்டம்  

C9 கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டம் வத்திக்கானில்

ஜூன் மாதம் திருத்தந்தையுடன் இடம்பெற்ற கர்தினால்கள் அலோசனை அவைக் கூட்டத்தில் சிறார் பாதுகாப்பு குறித்தும், திருஅவையில் பெண்களின் இடம் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கர்தினால்களை உள்ளடக்கிய C9 எனப்படும் ஆலோசனை அவைக் கூட்டம் தற்போது வத்திக்கானில் இடம்பெற்றுவருகிறது.

திங்களன்று துவங்கிய இக்கூட்டம், இவ்வாண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்குப்பின் இடம்பெறும் நான்காவது ஆலோசனை அவைக் கூட்டமாகும்.

பிப்ரவரி மாதம் 5 முதல் 7ஆம் தேதி வரையிலும், ஏப்ரல் மாதம் 15 முதல் 16 வரையிலும், ஜூன் மாதம் 17 முதல் 18 வரையிலும் இடம்பெற்ற கர்தினால் அவை ஆலோசனைக் கூட்டங்களில், கடந்த ஜூன் மாதக் கூட்டத்தில் கர்தினால்களுடன் ஓர் அருள்சகோதரியும், இரு பொதுநிலையினரும்  கருத்துப் பகிர்பவர்களாக இடம்பெற்றிருந்தனர்.

ஜூன் மாதம் திருத்தந்தையுடன் இடம்பெற்ற கர்தினால்கள் அலோசனை அவைக் கூட்டத்தில் சிறார் பாதுகாப்பு குறித்தும், திருஅவையில் பெண்களின் இடம் குறித்தும் விரிவாக கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இந்த கூட்டத்தில் அருள்சகோதரி Linda Pocher மற்றும் இரு ஆசிரியைகள், வலந்தினா ரொத்தோந்தி, டொனாத்தா ஹொராக் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை கர்தினால்களுடனும் திருத்தந்தையுடனும் பகிர்ந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2024, 13:35