இயற்கை வழியில் தண்ணீரை வடிகட்டி எடுத்தல் இயற்கை வழியில் தண்ணீரை வடிகட்டி எடுத்தல் 

பூமியில் புதுமை : இராமநாதபுரம் செவல்பட்டி ஊரணி

தண்ணீர்த் தேவைக்காகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் நிலையில், மழை நீரைச் சேமித்து, குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கிவருகிறது, ஒரு கிராமம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்

வறண்ட பூமியான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல நூறு கிராமங்கள், தண்ணீர்த் தேவைக்காகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் நிலையில், எப்போதாவது பெய்யும் மழை நீரைச் சேமித்துவைத்து குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்கி, எடுத்துக்காட்டான ஒரு கிராமமாகத் திகழ்ந்துவருகிறது, `செவல்பட்டி’ கிராமம். செவல்பட்டி கிராமத்தின் முன்னோர்கள், ஊர்கூடி, தங்களது கிராமத்தில் உள்ள இந்த ஊரணியைத் தூர்வாரி ஆழப்படுத்தினர். பக்கத்து மாவட்டங்களில் பெய்யும் மழைநீரை, இந்த ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள கன்னி மலைப்போடை, ஊடோடை, கஞ்சநாயக்கன் பட்டி ஓடை ஆகியவற்றின் வழியாகத் தங்கள் ஊரணியில் சேமிக்கின்றனர். இந்த ஊரணியையும், அதில் உள்ள நீரையும் பாதுகாக்கும் வகையில் ஊரணியைச் சுற்றிலும் முள்வேலிகளை அமைத்துச்  சுகாதாரத்தைப் பேணி வருகின்றனர். இந்த ஊரணியில் குளிப்பதற்கோ, துணி துவைப்பதற்கோ அல்லது ஆடு, மாடுகளைக்  குளிப்பாட்டுவதற்கோ அனுமதி கிடையாது. மேலும், எப்போதாவது பெய்யும் மழைநீரைச் சேமிக்க, தங்கள் கிராமத்தில் கட்டப்படும் புதிய வீடுகளில் மழைநீர் சேமிப்பு ஏற்பாட்டினையும் மேற்கொண்டுள்ளனர், இந்த கிராமத்து மக்கள். இதனால், கோடைக்காலத்திலும், முழு அளவில் நீர் நிறைந்து ததும்புகிறது, செவல்பட்டி ஊரணி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2019, 14:49