இந்தியாவில் பெருமழையின்போது இந்தியாவில் பெருமழையின்போது  

இனியது இயற்கை - பாலாறு

கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும், தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து ஓடும் பாலாறு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலை பாலாற்றின் பிறப்பிடம். கடல் மட்டத்தில் இருந்து 4,851 அடி உயரமுள்ளது இது. பெங்களூருவில் இருந்து ஏறக்குறைய 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம். பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, சித்ராவதி, அரக்காவதி, பாப்னாகி என 6 ஆறுகளின் பிறப்பிடமும் நந்திதுர்கம்தான். கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது பாலாறு. இதற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன அவற்றில் செய்யாறு, நீவா ஆறு ஆகியவை முதன்மையானவை. வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, மேல்மொணவூர், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன.

12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார், தான் பாடிய பெரிய புராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்' என்ற பகுதியில் பாலாற்றின் வளமும் அது பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள், சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2022, 14:43