ஏரியில் மீன்பிடித்தல் ஏரியில் மீன்பிடித்தல் 

இனியது இயற்கை : தமிழக ஏரிகள்

செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்துதான் பெருமளவில் குடிநீர் எடுத்து வரப்பட்டு சென்னை மாநகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள், அதாவது மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. மாநிலத்தில் 5.40 இலட்சம் எக்டேர் நிலம், ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. தமிழகத்தின் ஏரிகள் மாவட்டம் என்று செங்கல்பட்டு அழைக்கப்படுகின்றது.

செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதால், ஏரிகள் மாவட்டம் என்ற பெருமையை, காஞ்சிபுரம் இழந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித் துறை பராமரிப்பில், 909 ஏரிகள் இருந்தன. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டம் என்ற பெருமை இருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் புதிதாகப் பிரிக்கப்பட்டபோது, காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள், 381 பொதுப்பணித் துறை ஏரிகள் மட்டுமே சேர்க்கப்பட்டன. மீதமுள்ள, 528 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் கொண்டு வரப்பட்டதனால், அதிக ஏரிகளைக்கொண்ட மாவட்டம் என்ற பெருமையை, காஞ்சிபுரம் இழந்துள்ளது. வட கிழக்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

தமிழகத்தின் ஏரிகள் என்று பார்த்தோமானால், முதலில், சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் மொத்தம் ஐந்து. அவை, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி, சோழாவரம், செங்குன்றம், புழல் ஆகியவை. இந்த ஏரிகளுள் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்துதான் பெருமளவில் குடிநீர் எடுத்துவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2022, 15:04