தமிழக கிராமங்கள்தோறும் காணப்படும் வேப்ப மரம் தமிழக கிராமங்கள்தோறும் காணப்படும் வேப்ப மரம்  

இனியது இயற்கை : கொங்கு நாடு

சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கொங்கு நாடு தனி நாடாகவே குறிக்கப்படுகிறது. கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கொங்கு நாடு தனி நாடெனக் கூறுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

குறிஞ்சி நிலமும், முல்லை வளமும், மருத நிலமும் கொண்டது கொங்கு நாடு. மலையும் காடும் நிறைந்த நாட்டில் தேன்மிகுதியாகக் கிடைத்தது. தேன் நிறைந்த நாடு கொங்கு நாடு எனப்பட்டது. சேலம், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் சேர்ந்த நிலப் பகுதி பழைய காலத்தில் கொங்கு நாடு எனப் பெயர் பெற்றது. கொங்கு என்பது ‘தேன்’ என்றும் பெயர் பெறும். இந்நாடு சில காலங்களில் சேரர் கைப்படும், சில சமயங்களில் சோழர் கைப்படும். ஆயினும் இந்த நாட்டை, சிற்றரசர் பலர் ஆண்டு வந்தனர். அக்காலங்களில் வெவ்வேறு அரசுகளுடன் கொங்கு நாடு இணைக்கப்பட்டபோதிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையை இந்நாடு இழக்கவில்லை. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் கொங்கு நாடு தனி நாடாகவே குறிக்கப்படுகிறது. நூற்றாண்டுகள் தோறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கொங்கு நாடு தனி நாடெனக் கூறுகின்றன.

கொங்கு நாடு, நான்கு புறமும் மலைகளை அரணாகக்கொண்டு மிகுந்த பாதுகாப்பாக அமைந்துள்ளது. காவிரி, அமராவதி, நொய்யல், குடவனாறு, சண்முக நதி, பவாநி, உப்பாறு, நல்காஞ்சி போன்ற பன்னிரண்டு ஆறுகள் ஓடுகின்ற நாடு இது. “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்” என்ற பழமொழி, இதன் வளத்தைப் பறைசாற்றும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2022, 15:15