நாற்று நடுதல் நாற்று நடுதல் 

இனியது இயற்கை - நன்செய், புன்செய் நிலங்கள்

ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் வாழும் நிலத்தைச் சார்ந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும், நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக் கூறுகளும் அந்த இனம் சார்ந்திடும் நிலத்தன்மை, தட்பவெட்ப நிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என்பர் நிலவியல் அறிஞர்கள். ஐந்து வகை நிலப்பாகுபாட்டுடன் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை, செய்த தொழில், வழிபாடு ஆகியவை இதையே உறுதிப்படுத்தும்.

தமிழர்கள் நிலத்தை வேறு வகைகளாகவும் தரம் பிரித்துள்ளனர். முதலில் நன்செய், புன்செய் ஆகிய நிலங்கள் குறித்து காண்போம்.

நிறைய நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் நஞ்சை நிலங்கள். உதாரணமாக நெல், கரும்பு, மஞ்சள், வாழை, வெற்றிலை போன்ற பயிர்களுக்கு நிறைய தண்ணீர் தேவை. இவை விளையும் நிலம் எல்லாமே நஞ்சை நிலம்தான். பெரும்பகுதி ஆற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எல்லா நிலங்களுமே நஞ்சை நிலங்களாகத்தான் இருக்கும். அதற்கு நேர்மாறாக, குறைந்த நீர் பாய்ச்சி வேளாண்மை செய்யப்படும் நிலங்கள் எல்லாம் புஞ்சை நிலங்கள். பருத்தி, கடலை, சோளம், பீன்ஸ், துவரை, எள், உளுந்து, கம்பு, வரகு, சாமை, தினை, மொச்சை, காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவை புஞ்சை நிலங்களில் விளையும். இதில் கரிசலாங்கண்ணி, கொத்தமல்லி, புதினா போன்ற கீரைகள் மட்டும் நஞ்சை மற்றும் புஞ்சை ஆகிய இரண்டு நிலங்களிலும் வளரும். அதிக நீர் பாய்ச்சினால், அது நஞ்சை. குறைந்த நீர் பாய்ச்சினால், அது புஞ்சை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2022, 13:56