மண் பானைகள் மண் பானைகள் 

இனியது இயற்கை: தமிழரின் பாரம்பரிய சமையல் பாத்திரம்

எஃகு மற்றும், குச்சி அல்லாத சமையல் பானைகளுடன் ஒப்பிடும்போது களிமண் பானைகள் மிகவும் மலிவானவை. இவை தெருக்கடைகளில் எளிதில் கிடைக்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

பொங்கல் பண்டிகை, தமிழர்களின் முக்கிய விழாக்களில் ஒன்று. இந்த விழாவில் முக்கிய அம்சமாக விளங்குவது சர்க்கரை பொங்கல் செய்ய உதவும் மண்பானை. பொங்கல் பண்டிகையன்று, மண் பானையில் பொங்கல் வைத்து படையல் செய்வது, தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது நவீன உலகில் பித்தளை, சில்வர் உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்கள் சந்தையில் கிடைத்தாலும், மண்பானையில் செய்யப்படும் உணவுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்றுதான் சொல்லவேண்டும்.  ஏனெனில் மண்ணாலான பானைகள் பற்றி பழங்காலத்தில் சித்தர்கள் தங்களுடைய குறிப்புகள், மற்றும் பாடல்கள் வழியாகத் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் மனிதர்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மண் பாத்திரங்களுக்கு உண்டு எனப் பதிவுசெய்துள்ளனர். களிமண் இயற்கையானது. இது வெப்பமடையும்போது, களிமண் உணவில் இருக்கும் அமிலத்துடன் சேர்ந்து, ஹைரட்ஜன் வீரியத்தை சமநிலையாக்குகிறது, மற்றும், உணவின் செரிமானத்தையும் எளிதாக்குகிறது. மண்பானைச் சமையல் என்பது,  நம் மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவு, சுவையாகவும், கெட்டுப்போகாமலும் இருக்கும். மண்பானை, களிமண்ணால் தயாரிக்கப்படுகின்றது. பழங்காலத்தில் நம் வீடுகளில் மண்பானையில் குடிதண்ணீர் இருக்கும். பழங்காலத்தில் மண் பாண்டங்கள் சமையலறையின், ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன. மக்கள் தங்கள் உணவை மெதுவாக சமைப்பதன் வழியாக அவர்களின் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சுவைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் தக்க வைத்துக்கொண்டனர். அதோடு, மண்பானை ஆயுர்வேதத்தால், உடல்நலத்திற்குத் தேவையான சமையல் பாத்திரமாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மண்பானையில் உள்ள நுண் துளைகளால் நாம் சமைக்கும் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும். இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையைப் பெறும். மண்பானையில் சமைக்கும்போது, அது உணவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் கந்தகத்தைச் சேர்க்கிறது என்று கூறப்படுகிறது

மண் பானை கொள்கலனாக மட்டும் இன்றி, ஓர் அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள், பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது. (நன்றி இணையதளங்கள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2022, 15:31