உக்ரைன் போரில் இறந்தவர்களுக்காக இறைவேண்டல் உக்ரைன் போரில் இறந்தவர்களுக்காக இறைவேண்டல் 

உக்ரைன் போரில் குழந்தைகள் படுகொலை!

உக்ரைன் நாடு முழுவதும் அதிகரித்துவரும் விரோதப் போக்கால் கல்வி முறையே சீரழிந்துள்ளது : ஐநா அதிகாரி Russell

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

“உக்ரைனில் ஏறத்தாழ 972 குழந்தைகள் வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயம் அடைந்துள்ளனர் என்றும், போரின்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

தான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) நிர்வாக இயக்குனர் Catherine Russell அவர்கள், அந்நாட்டில் அமைதிக்கான அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Mariupol, Luhansk, Kremenchuk, Vinnytsia போன்ற மக்கள் தொகை மிகுந்துள்ள நகரங்கள் குறிவைத்து குண்டுகளால் தாக்கப்பட்டதன் விளைவாக இங்குள்ள குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் Russell

“மீண்டும் ஒருமுறை, எல்லாப் போர்களிலும் நிகழ்வது போன்று, தலைவர்களின் பொறுப்பற்ற முடிவுகள், குழந்தைகளின் வாழ்வில் இப்படிப்பட்ட பேராபத்துகளை விளைவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார் Russell.

UNICEF குழந்தைகள் நிதியத்தின் ஆய்வுபடி, 10க்கு 1 பள்ளி என்ற விகிதத்தில் பள்ளிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன என்றும், மேலும் நாடு முழுவதும் அதிகரித்துவரும் விரோதப் போக்கால் கல்வி முறையே சீரழிந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் Russell.

உக்ரைனின் குழந்தைகளுக்கு அவசரமாக, பாதுகாப்பு, நிலையானத்தன்மை, கல்வி, உளவியல் வழிகாட்டல் ஆகியவை தேவை என்று கூறியுள்ள Russell, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உக்ரைனின் குழந்தைகளுக்கு தற்போது அமைதியே அதிகம் தேவைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2022, 14:03