பற்றி எரியும் காடு பற்றி எரியும் காடு  

இனியது இயற்கை – வசதியில் ஒளிந்திருக்கும் பேராபத்து!!

வசதிகள் வேண்டுமென்றால் விலைமதிக்க முடியாத இயற்கை வளங்களை இழக்கவேண்டும் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் சில முக்கியமானவற்றில் சாலைகளும், இரயில் பாதைகளும், மின்சார இணைப்புகளும் அடங்கும். ‘இன்னும் எங்கள் ஊருக்குப் பேருந்து வசதி வரவில்லை...’, ‘எங்கள் தமிழ் நாட்டில் பல இடங்களுக்கு இரயில் வசதியே இல்லை...’, ‘இந்தியாவில் மின்சார வசதியின்றி இன்னும் பல கிராமங்கள் இருக்கின்றன...’ என்றெல்லாம் நாம் பல நேரங்களில் புலம்பித் தீர்க்கின்றோம். ஆனால் இந்த வசதிகளையெல்லாம் நாம் பெறவேண்டும் என்றால் விலைமதிக்க முடியாத இயற்கை வளங்களை இழக்கவேண்டிய துயரமான நிலை ஏற்படும் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

இந்தியாவில் சாலைகள், இரயில் பாதைகள், குழாய்கள் அமைக்கவும் மற்றும் மின்சார இணைப்புகளுக்காகவும் இதுவரையிலும் ஏறத்தாழ 53.66 விழுக்காடு அளவிற்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகளவாக 2019-ஆம் ஆண்டில் குஜராத்தில் சாலைகள் அமைப்பதற்காக  753.08 ஹெக்டேர் அளவுக்குக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரங்கம் அமைப்பதற்காக 27.4 விழுக்காடு காடுகள், அதாவது 2,526.09 ஹெக்டேர் அளவுக்குப் அழிக்கப்பட்டுள்ளன. இதில், நிலக்கரி அல்லாத சுரங்கப் பாதைகள் அமைப்பதற்காக 62 விழுக்காடு காடுகளும், நிலக்கரி சுரங்கத்துக்காக 38 விழுக்காடு காடுகளும் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2022, 14:46