பிரான்ஸ் நாட்டில் வேளாண்மை பிரான்ஸ் நாட்டில் வேளாண்மை 

இனியது இயற்கை – நீர், நிலமின்றி வாழ்வில்லை

வேளாண்மைத் தொழில், எல்லாத் தொழில்களையும்விடச் சிறந்தது; சுதந்திரமானது; நிலையானது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

  • “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
  • உழந்தும் உழவே தலை” என்றும், “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”
  • என்றும் திருக்குறள் கூறுகிறது.
  • அதைப்பற்றியெல்லாம் யாரும் இன்று கண்டுகொள்வதில்லை.
  • இன்றைய தலைமுறைக்கு வேளாண்மைத் துறையில் போதிய ஆர்வம் இல்லை! அரசுப் பணிகளைவிட, வியாபாரத்தைவிட விவசாயம் இரண்டாந்தரத் தொழில் என்றே கருதுகின்றது.
  • “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்று இலக்கியங்கள் பாராட்டுகின்றன.
  • ஏனெனில், ஊட்டி வளர்க்கும் தாய் போன்றது நிலம். அத்தாயின் கைகள்தான் விவசாயிகள்.
  • நிலத்தில் நெல் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக பணப் பயிர்கள், கரும்பு, முதலியன உற்பத்தி செய்வது, வீட்டு மனைகளாக மாற்றி விற்பது போன்ற மனப்போக்கு வளர்ந்து வருவதால், விவசாய நிலம் குறைந்து வருகிறது. விரைவில் கொள்ளை இலாபம் தரும் எதுவும் அழிவையே தரும் என்பதை மறந்திட வேண்டாம். அதுபோல், மண்வள இழப்பு,
  • மனிதகுலத்திற்கு அழிவு என்பதையும் உணர்வீர்!

வறட்சியால் நிலம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், மழையை கூடுதலாகப் பெறவும் காடுகளின் அளவைக் கூடுதலாக்கவேண்டும். வேளாண்மை முறைப்படி மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு காடு இருக்கவேண்டும். இப்போது அவ்வளவு இருக்கிறதா என்ற கேள்வியையும் கேட்கத் தவறவேண்டாம். மேலும், தண்ணீரைச் சொட்டு நீர்கூட வீணாக்காமல் சேகரிக்கும் மனப்பான்மையும் தேவை.

  • வேளாண்மைத் தொழில் எல்லாத் தொழில்களையும்விடச் சிறந்தது; சுதந்திரமானது; நிலையானது. விவசாயப். பொருள்களின் விலை நிர்ணயம், உற்பத்தி செய்த பொருள்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு உரிய ஏற்பாடுகள் தேவை.
  • வேலை தேடி அலைவதை விடுத்து, வேளாண்மையில் ஈடுபடுவோம்!
  • நாட்டுக்கும் நமக்கும் பெருமை சேர்ப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2022, 13:32